அண்மைய செய்திகள்

recent
-

யாழ். பல்கலைக்கழகத்தில் ஒன்று கூடிய அரசியல் பிரமுகர்கள் -


யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அரசியல் பிரமுகர்களுக்குமிடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
தமிழ் மக்கள் நீண்ட காலமாக போராடிக் கொண்டிருப்பது தமக்கான நிரந்தரமான அரசியல் தீர்வொன்றினை பெற்றுக்கொள்வதற்காகவே, இது வரையில் பல வழிகளிலும் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் நாம் இன்று பல தரப்புக்களாக எம்முள் பிளவுபட்டு நின்று நாம் எமது பேரம் பேசும் பலத்தை இழந்துவிடும் துர்ப்பாக்கிய நிலையில் எமது பேரம் பேசும் பலத்தை பலப்படுத்த நாம் ஒருமித்த முடிவினை எடுக்க வேண்டியது என்பது காலத்தின் கட்டாய தேவையாகும்.

இத்தகைய சூழலினை தமிழ் தரப்புக்கள் அனைத்தும் உணர்ந்து கொண்டு பிளவுபட்டு நின்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றாக கூடி கலந்துரையாடியமையும் ஆரோக்கியமாக கலந்துரையாடல்கள் இடம்பெற்று எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய பாதையில் பயணிக்கும் கட்சிகள் ஒருமித்த நிலைப்பாடு ஒன்றை எடுக்க கொள்கை அளவில் இணக்கம் தெரிவித்துள்ளமையும் ஆரோக்கியமான ஒன்றே ஆகும்.
அது மாத்திரமின்றி தமிழ் கட்சிகள் சார்பில் தலா இரண்டு பேர் கொண்டதாக குழு ஒன்றினை இன்றைய கலந்துரையாடலில் நியமித்துள்ளோம்.அதனடிப்படையில் தொடர்ந்து எதிர்வரும் 07.09.2019 அன்று மீண்டும் கூடி கலந்துரையாடுவதாக தீர்மானிக்கப்பட்டது.

தொடர்ந்து, பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களுடன் நாம் நிபந்தனைகளை முன்வைத்து பேரம் பேசுதல் என்றும் அத்தகைய நிபந்தனைகளினை அடுத்த கலந்துரையாடலில் முடிவு செய்வது என்றும் அதனடிப்படையில் பேரம் பேசலில் ஈடுபடுவது என்றும், அத்தகைய பேரம் பேசல் வெற்றியளிக்காத பட்சத்தில் அடுத்த கட்டத்தில் நாம் எத்தகைய முடிவொன்றை எடுக்க வேண்டும் என்பதை தொடர்ந்தும் கலந்துரையாடுவது என்றும் இன்றைய கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறீதரன், மாவை சேனாதிராஜா, சித்தார்த்தன், பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
யாழ். பல்கலைக்கழகத்தில் ஒன்று கூடிய அரசியல் பிரமுகர்கள் - Reviewed by Author on October 06, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.