அண்மைய செய்திகள்

recent
-

இலங்கைக்கு ஆட்கடத்தலில் ஈடுபட்ட படகுடன் ஐந்து இலங்கையர் கைது

இந்தியாவில் தங்கியிருந்த மூவரை சட்டபூர்வமற்ற முறையில் பாக்குநீர் கடல் பிராந்தியத்துக்கூடாக அழைத்து வரப்பட்ட படகுடன் ஐவர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு மன்னார் நீதிமன்றில் ஆஐர்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்திய தமிழ் நாட்டில் தங்கியிருந்த மூன்று இலங்கையரை தாய்நாடான
இலங்கைக்கு குடிவரவு குடியகழ்வு சட்டத்துக்குமாறாக தலைமன்னார் பாக்குநீர் கடலினூடாக படகொன்றீன் மூலம் அழைத்து வருவதற்கான நடவடிக்கையை இரு இலங்கை மீனவ படகோட்டிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இந்தியாவில் தங்கியிருந்த இலங்கையரான மானிப்பாயைச் சேர்ந்த இருவரும், மன்னாரைச் சேர்ந்த ஒருவரும் படகோட்டிகளான தலைமன்னாரைச் சேர்ந்த ஒருவரும் பேசாலையைச் சார்ந்த ஒருவரும் மொத்தம் ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் பேசாலை பகுதியிலுள்ள படகு ஒன்றிலே இவர்கள் அழைத்துவரப்பட்டபோது பேசாலை கடற்கரையிலிருந்து சுமார் ஐந்து கிலோ மீற்றர் தூரத்திலே இவர்கள் அகப்பட்டுக் கொண்டனர்.

ஞாயிற்றுக் கிழமை அதிகாலை தலைமன்னார் கடற்படையினரால் அகப்பட்டுக்கொண்ட இவர்கள் தலைமன்னார் பொலிசில் ஒப்படைக்கப்பட்டனர்.

இவ் சந்தேக நபர்களை தலைமன்னார் பொலிசார் நேற்று திங்கள் கிழமை
(21.10.2019) மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர்
கணேசராஐh முன்னிலையில் ஆஐர்படுத்தியபோது இவர்களை எதிர்வரும் 25.10.2019 விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவு பிறப்பித்தார்.


இலங்கைக்கு ஆட்கடத்தலில் ஈடுபட்ட படகுடன் ஐந்து இலங்கையர் கைது Reviewed by Author on October 22, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.