அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் தேர்தல் முறைப்பாடாக 13 முறைப்பாடுகள் மாத்திரமே கிடைக்கப்பெற்றுள்ளன.

மன்னார் மாவட்டத்தில் தேர்தல் முறைப்பாடாக இதுவரை 13 முறைப்பாடுகளே கிடைக்கப்பெற்றுள்ளது. ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் இது சொற்பமே எனமன்னார் தேர்தல்கள் உதவி தெரிவத்தாட்சி அலுவலகரும் முறைப்பாட்டு நிலைய
அதிகாரியுமான எல்.ஜெ.றொகான் குரூஸ் இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்வரும் ஐனாதிபதி தேர்தல் விடயமாக மன்னார் தெரிவத்தாட்சி அலுவலகர் சி.ஏ.மோகன்ராஸ் மற்றும் மன்னார் உதவி தேர்தல் ஆணையாளர் ஜெ.ஜெனிற்றன் ஆகியோர் மன்னார் மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் கட்சிகளின் முகவர்களுக்கும் மற்றும் ஊடகவியலாளர்களுக்கும் நடாத்தப்பட்ட கருத்தமர்வில் தேர்தல் பாதுகாப்பு சம்பந்தமான விளக்கங்கள் வழங்கப்பட்டன.

இவ் அமர்வில் கலந்துகொண்ட மன்னார் தேர்தல்கள் உதவி தெரிவத்தாட்சி
அலுவலகரும் முறைப்பாட்டு நிலைய அதிகாரியுமான எல்.ஜெ.றொகான் குரூஸ் தெரிவிக்கையில்

 தேர்தலுக்கான அறிவுறுத்தல் வழங்கப்பட்டதிலிருந்து இதுவரைக்கும் மன்னார் மாவட்டத்தில் 13 தேர்தல் சம்பந்தமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இலங்கையில் பல இடங்களிலும் பல முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளபோதும் மன்னார் மாவட்டத்தில் பாரிய முறைபாடுகளாக அல்லாது சிறிய சிறிய முறைப்பாடுகளே கிடைக்கப்பெற்றுள்ளன.

இனிவரும் காலங்களில் எந்த முறைப்பாடுகளும் எமக்கு கிடைக்கப்பெறாது
மன்னார் மாவட்டத்தின் பெயருக்கு பங்கம் விளைவிக்காத தன்மையில் நாம்
செயல்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

இதற்கு பொலிசார் அரசியல் தலைவர்கள் மற்றும் இதன் உதவியாளர்கள்
ஒத்துழைப்பு வழங்கவேண்டும். எமது தேர்தல் தொடர்பான முறைப்பாட்டு அலுவலகம் 24 மணித்தியாலயங்களும்
சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.

எதாவது முறைப்பாடுகள் தெரிவிக்க வேண்டுமாயின் 0232223713 என்ற தொலைபேசி இலக்கத்துடனும், தொலை நகர் இலக்கம் 0232223714 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்றார்.

கிடைக்கப்பெற்ற முறைபாடுகள் தொடர்பாக பொலிசாரின் ஒத்துழைப்புடன்
நிவர்த்தி செய்யப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மன்னாரில் தேர்தல் முறைப்பாடாக 13 முறைப்பாடுகள் மாத்திரமே கிடைக்கப்பெற்றுள்ளன. Reviewed by Author on November 06, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.