அண்மைய செய்திகள்

recent
-

வளி மாசடைதலிருந்து நுரையீரல்களை பாதுகாப்பதற்கான இயற்கை வழிமுறைகள் -


தூசிகளின் பாதிப்பிலிருந்து நுரையீரல்களை பாதுகாப்பது அவசியமாகும். இதற்கு இயற்கையான வழிமுறைகளும் காணப்படுகின்றன.
நீராவி பிடித்தல்nature
சுவாசத்தின்போது உள்ளெடுக்கப்பட்ட தூசிகளை அகற்றுவதற்கு நீராவி பிடித்தல் ஒரு சிறந்த முறையாகும்.
ஒவ்வொரு நாளும் வெளியில் சென்று வீடு திரும்பிய பின்னர் நீரை நன்றாக கொதிக்க வைத்து அதனிலிருந்து வெளியேறும் நீராவியை உட்சுவாசம் மூலம் சிறிது நேரம் உள்ளெடுக்க வேண்டும்.
இருமலை கட்டுப்படுத்தாதுவிடல்
பொதுவாக மூக்கின் ஊடாக தூசிகள் உள்நுழைந்ததும் இருமல் ஏற்படும்.
இவ்வாறு இருமும்போது தூசிகள் மாத்திரமன்றி சளியும் வெளியேற்றப்படுகின்றது.
எனவே இருமல் வரும்போது அதனைக் கட்டுப்படுத்தாது நன்றாக இரும வேண்டும்.
கிரீன் டீ அருந்துதல்
கிரீன் டீயானது ஆக்ஜிஜனேற்றப்பட்டே பக் செய்யப்படுகின்றது.
இது நுரையீரல் வீக்கத்தை தடுக்கக்கூடியது.
அதுமாத்திரமன்றி நுரையீரலை சுத்தப்படுத்தக்கூடிய தன்மையும் கிரீன் டீக்கு உள்ளது.
1,000 நபர்களை வைத்து தென்கொரியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் நாளாந்தம் இரு முறை கிரீன் டீ அருந்துபவர்களின் நுரையீரல் ஆனது தேநீர் அருந்துபவர்களுடன் ஒப்பிடும்போது சிறந்த செயற்பாட்டினை கொண்டிருக்கின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அழற்சி எதிர்ப்பு உணவுகளை உண்ணுதல்
அன்றாட உணவில் அழற்சி எதிர்ப்பு உணவுகளை சேர்த்துக்கொள்ளுதல் சிறந்ததாகும்.
அதாவது மஞ்சள், செர்ரி, ஒலிவ், வால்நட் மற்றும் பீன்ஸ் போன்றவற்றினை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
அதேநேரம் பதப்படுத்தப்பட்டு உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
தேன் குடித்தல்
தேனில் நுண்ணுயிர்களை கொல்லும் தன்மை, அழற்சிகளுக்கான எதிர்ப்பு தன்மை என்பன காணப்படுவதுடன் ஆக்ஜிஜனேற்றப்பட்டும் உள்ளது.
இவ்வாறான சிறப்பியல்புகளைக் கொண்ட தேனானது பண்டைய காலம் தொட்டே நுரையீரல் அழற்சி மற்றும் ஆஸ்மா, காசநோய், தொண்டையில் ஏற்படும் கிருமி தொற்றுக்கள் உட்பட வேறுபட்ட சுவாச நோய்களுக்கு நிவாரணியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
எனவே வளி மாசடைந்த காலப்பகுதியில் தினமும் ஒரு தேகரண்டி தேனை அருந்திவருதல் சிறந்த பலனைத்தரும்.


வளி மாசடைதலிருந்து நுரையீரல்களை பாதுகாப்பதற்கான இயற்கை வழிமுறைகள் - Reviewed by Author on November 10, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.