அண்மைய செய்திகள்

recent
-

பேசாலை புனித வெற்றியன்னையின் ஆலயத்தில் கொடியேற்றம்.


இருநூறு வருடங்களுக்கு மேலாக பேசாலை கத்தோலிக்க மக்களின் பாதுகாவலியாக வீற்றிருக்கும் புனித வெற்றிநாயகியின் நாமம் கொண்ட வருடாந்த ஆலய விழாவை முன்னிட்டு 29.11.2019 இன்று வெள்ளிக் கிழமை இன்று மன்னார் மறைமாவட்டத்தின் பேசாலை பங்கில் புனித வெற்றிநாயகி ஆலயத்தில் கொடியேற்றம் இடம்பெறுகின்றது.

சுமார் ஆயிரத்து ஐநூறுக்கு மேற்பட்ட கத்தோலிக்க குடும்பங்கள் இவ் ஆலய
கட்டுக்கோப்புக்குள் இருந்து வருகின்றனர்.
 காலத்துக்குக்காலம் இலங்கை நாட்டை தாக்கிய அசுரங்களில் இருந்து இங்கு
பேசாலை பதியில் வீற்றிருக்கும் புனித வெற்றியன்னை இவ் வாழ் மக்களை காத்த பேரருள் இங்குதான் இருந்தது என சரித்திரம் கூறுகின்றது.

அதாவது கடற்பெருக்கு, சூறாவளி, கொள்ளைநோய், படை, பஞ்சம், பிணி எது இங்கு வந்தபோதும் அன்னையின் வெற்றிக்கரம் இங்குள்ள மக்களை காத்தது என இங்குள்ள வரலாறு கூறுகின்றது.

முன்னர் கொச்சின், யாழ்ப்பாணம் ஆகிய மறைமாவட்டங்களிலும் பின்னர் மன்னார் மறைமாவட்டத்தின் மேற்றாசனத்தின் கீழும் இவ் ஆலயம் தேவைக்கேற்ப திருத்த வேலைகள் இடம்பெற்றிருக்கின்றது.

அதாவது 1890, 1913, 1959, 1970 ஆகிய பகுதிகளில் இவ் ஆலயம்
திருத்தப்பட்டபோதும் இங்குள்ள கத்தோலிக்க மக்களின் சனத்தொகைக்கு ஆலய இடவசதி போதாமையால் 2001 ஆம் ஆண்டு பங்கு தந்தையாக இருந்த அருட்பணி வின்சன் பற்றிக் அடிகளாரின் (அ.ம.தி) முயற்சியால் இவ் ஆலயம் 17000 சதுர அடியாக புனரமைக்கப்பட்டு இலங்கையிலேயே இது ஒரு பிரமாண்டமான ஆலயமாக இவ் வெற்றியன்னையின் ஆலயம் தற்பொழுது காட்சியளிக்கின்றது.

மன்னார் மறைமாவட்டத்தின் புனித ஸ்தலமாக விளங்கும் மடு அன்னை ஆலயம் வருவோர் இவ் பேசாலை புனித வெற்றியன்னையின் ஆலயம் தரிசித்துச் செல்லும்போது ஆசீர்வாதமும், ஆனந்தமும் கொண்டு திரும்புவதாக தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இவ் புகழ்பெற்ற ஆலயத்தின் பெருவிழாவை முன்னிட்டு 29.11.2019
வெள்ளிக்கிழமை கொடியேற்றம் இடம்பெற்று 08.12.2019 ஞாயிற்றுக் கிழமை
பெருவிழாவாக இவ் மக்களால் கொண்டாடப்பட இருக்கின்றது.

இந் நாள் அதாவது மார்கழி 08 புனித கன்னிமரியின் அமல உற்பவ பெருவிழா.
கத்தோலிக்க திருச்சபை இந்நாளை பெருவிழாவாக கொண்டாடும் நாள்.
இறைமகன் இயேசுவை பெற்றெடுப்பதற்காக nஐன்ம பாவத்தில் கறைபடியாது கடவுளது வரங்களை நிரம்பப் பெற்றிருந்தவள்தாள் கன்னிமரியாள்.
அமல உற்பவி என்று 08.12.1854 ல் 9 ஆம் பத்திநாதர் பாப்பரசர்
பிரகடனம் செய்ததைத் தொடர்ந்து இவ் விழாவை வருடந்தோறும் திருச்சபை
நினைவுகூர்ந்து வருகின்றது.

'உனக்கும் பெண்ணுக்கும் உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை
ஏற்படுத்துவேன்' (ஆதி. 3:15) 'அருள் நிறைந்தவள்' (லூக்.1:24)
இவற்றிலிருந்து கன்னிமரியாள் அமல உற்பவி என்று தெளிவாக
எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

இதனால்தான் ஆதியிலிருந்தே மக்கள் விசுவசித்து வந்துள்ளனர். இந்த
நிலையில்தான் இவ் விழாவை மன்னார் மறைமாவட்த்திலுள்ள பேசாலை மக்களும் கொடியேற்றத்துடன் ஒன்பது நவநாட்கள் ஆய்த்த வழிபாட்டுடன் பத்தாம் நாள் அதாவது மார்கழி 08 நாள் பெருவிழாவாக கொண்டாடுகின்றனர்.

கத்தோலிக்க திருச்சபையின் வாழ்விலும் வளர்ச்சியிலும் வழிபாடுகளிலும்
மரியாள் சிறப்புப்பக்தி மக்களின் ஆழ்ந்த விசுவாசத்திலும்
உள்ளுணர்வுகளிலும் உறுதியாக கட்டப்பட்டவள்.

இலங்கைத் தீவில் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆலயங்கள் புனிதர்களுக்கு
அர்பணிக்கப்பட்டுள்ளபோதும் அவைகளில் குறிப்பாக மரியாளுக்கே அதிகமான ஆலயங்கள் அர்பணிக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு இலங்கை தீவில் ஐந்து மறைமாவட்டங்களுடைய பேராலயம் மரியாளுக்கே அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. இந்த வரிசையில்தான் மன்னார் மறைமாவட்டத்தில் கத்தோலிக்கர் செறிந்து வாழும் பேசாலையிலும் வெற்றியன்னை இவ் மக்களின் பாதுகாவலியாக கோயில் கொண்டு இருக்கின்றாள்.

இவ்வருடம் பங்குதந்தையும் கத்தோலிக்க திருச்சபையின் சட்டவல்லுனருமான அருட்பணி எஸ்.கே.தேவராஐ; அடிகளார் தலைமையில் நடைபெறும் இவ் விழாவில் இவ்வாழ் மக்கள் வெற்றியன்னையின் பாதம் வேண்டிநிற்பது அன்னையே வெற்றி அன்னையே ஊரவர் சமூகம் கூடி உம் பாதம் வீழந்து கிடக்கின்றோம் என்றும், எங்கள் நாட்டில் சமாதானம் நிலவி நல்லினக்கத்தை பெற்றுக்கொள்ள ஒவ்வொருவரும் அன்பிய வாழ்வில் வாழ இறைவனிடம் வேண்டும்அம்மா என வேண்டி நிற்கின்றனர்.

பேசாலை புனித வெற்றியன்னையின் ஆலயத்தில் கொடியேற்றம். Reviewed by Author on November 28, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.