அண்மைய செய்திகள்

recent
-

பூமியை கண்காணிக்க புதிய செயற்கைகோள் - விண்ணில் நிலைநிறுத்தியது இஸ்ரோ!


பூமியை கண்காணித்து துல்லியமான தகவல்களை அளிப்பதற்காகவும், எல்லைகளை கண்காணித்து தகவல் அளிக்கவும் இஸ்ரோ கார்டோசாட் என்ற செயற்கை கோளை விண்ணில் இன்று செலுத்தியது.

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, கார்டோசாட்-3 என்ற செயற்கைக்கோளை தயாரித்தது. இந்த செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 13 நானோ வகை செயற்கைகோள்கள் இன்று பி.எஸ்.எல்.வி. சி-47 ரொக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
திட்டமிடப்பட்ட சரியான நேர்கோட்டில் பயணித்த பிஎஸ்எல்வி சி47 ரொக்கெட் பூமியின் சுற்றுவட்டப்பாதையை அடைந்ததும் கார்டோசாட் 3 செயற்கைகோள் தனியாக பிரிக்கப்பட்டு வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

அதனுடன் அனுப்பபட்ட நானோ செயற்கைகோள் ஒன்றன்பின் ஒன்றாக நிலைநிறுத்தப்பட்டது.
அதன்பின்னர் இந்த திட்டத்தின் வெற்றி குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் உரையாற்றினார்.
பூமியை கண்காணிக்க புதிய செயற்கைகோள் - விண்ணில் நிலைநிறுத்தியது இஸ்ரோ! Reviewed by Author on November 27, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.