அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில் நானாட்டானில் இடம் பெற்ற ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் முறை தொடர்பான கருத்தமர்வு-படம்

மன்னார் கறிற்ராஸ் வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில் எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வாக்களிக்கும் முறை தொடர்பிலான கருத்தமர்வு இன்று புதன் கிழமை(6) காலை நானாட்டான் பிரதேச செயலகத்தில் உதவித் தேர்தல் ஆணையாளர் ஜே.ஜெனிற்றன் தலைமையில் நடை பெற்றது.

இக் கருத்தமர்வில் நானாட்டான் பிரதேச செயலாளர், நிர்வாக உத்தியோகத்தர், கிராம அலுவலர்களின் நிர்வாக உத்தியோகத்தர், கிராம அலுவலர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூர்த்தி உத்தியோகத்தர்கள், மற்றும் நானாட்டான் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் என சுமார் 75  பேர் வரை கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

இக் கருத்தமர்வில் குறிப்பாக வாக்காளர்களின் உரிமைகள், வாக்களிக்கும் முறைகள், வாக்களிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லும் ஆவணங்கள், தேசிய அடையாள அட்டை இல்லாத பட்சத்தில் செய்ய வேண்டிய நடவடிக்கைகள், வாக்களிப்பு நேரங்கள், தொடர்பான மிக முக்கியமான அறிவுறுத்தல்கள் தொடர்பாக முழுமையான விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

 இதில் கலந்து கொண்ட அனைவரும் தமது கிராமங்களில் இக்கருத்தமர்வு தொடர்பான விழிப்பூட்டல்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதன் அவசியத்தினையும் விரிவாக  மன்னார் உதவித் தேர்தல் ஆணையாளர் ஜே.ஜெனிற்றன் தெழிவு படுத்தியமை குறிப்பிடத்தக்கது.




மன்னார் வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில் நானாட்டானில் இடம் பெற்ற ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் முறை தொடர்பான கருத்தமர்வு-படம் Reviewed by Author on November 07, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.