அண்மைய செய்திகள்

recent
-

தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது மன்னாரில் வெள்ளப்பெருக்கு எற்படுமாகில் மாற்றுவழி கையாளப்படும்.

ஐனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நiபெற்றுக் கொண்டிருக்கும்போது
மன்னாரில் வெள்ளப்பெருக்கு ஏற்படுமாகில் பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்கு
சேவை செய்யவேண்டிய அதிகாரிகள் தேர்தல் கடமையில் ஈடுபட்டுக்
கொண்டிருந்தால் மாற்று வழியை கையாண்டு கொண்டு இவர்களை பாதிப்புக்குள்ளான  மக்களுக்கு உதவிபுரிய அனுப்பிவைக்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

 பருவகால மழை விழு;ச்சி தற்பொழுது மன்னாரில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் பாதிப்புக்குள்ளாகும் மக்கள் விடயமாக  முன் ஆயத்தம் தொடர்பான கூட்டம் மன்னார் அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் க.திலீபனின் நெறிப்படுத்தலின் கீழ்  மன்னார் மாவட்ட செயலாளர் சி.ஏ.மோகன்ராஸ் தலைமையில் நேற்று முன்தினம் திங்கள் கிழமை (04.11.2019) மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இக் கூட்டத்தில் மன்னார் மாவட்டத்தின் அனைத்து திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டனர்.

ஐனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது
தற்பொழுது மன்னார் பகுதியில் நிலவும் மழை வீழ்ச்சியால் வெள்ளப்பெருக்கு ஏற்படுமாகில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பாக இவ் கூட்டத்தில் ஆராயப்பட்டது.

மன்னார் மாவட்டத்தில் மழை பெய்யும் காலங்களில் இப் பகுதியில் அதிகமான இடங்கள்  வெள்ளத்தினால் பாதிப்படையும் நிலைமை தோன்றி வருவதுண்டு. தற்பொழுது மன்னார் பகுதியில் மழை வீழ்ச்சி இடம்பெற்று வருவதால் பாதிப்பு அடையும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பதற்கான முன்னோடி ஆயத்தங்களை சகல திணைக்கள அதிகாரிகளும் மேற்கொள்ளுவதற்கான நடவடிக்கைகளை
எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் வெள்ளப் பெருக்கால் மக்கள் பாதிப்படையும் தருனத்தில் ஒவ்வொரு திணைக்களமும் என்ன செய்ய முடியும் என்பதையும் ஆராயப்பட்டன.

மன்னார் மாவட்டத்தை பொறுத்தமட்டில் இம்முறை வழமையைவிட அதிகமான மழை வீழ்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக வழி மண்டல ஆராய்ச்சி திணைக்களம் தெரியப்படுத்தியுள்ளது.

அதேநேரத்தில் இங்கு மழை வீழ்ச்சி ஏற்படும்வேளையில்  ஐனாதிபதிக்கான
தேர்தலுக்கான வாக்கெடுப்புக்களும் நடைபெற இருக்கின்றது.

இவ்வேளையில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் வேளையில் மக்களை தங்கவைப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நலன்புரி நிலையங்கள் தேர்தல் வாக்களிப்பு நிலையங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

ஆகவே தேர்தலுக்கு வாக்களிக்கப்படும் வேளையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் பட்சத்தில் பாதிப்பு அடையும் மக்களுக்கு என்ன நடவடிக்கை எடுப்பது
என்பதுபற்றியும் விரிவாக ஆராயப்பட்டது.

இது விடயமாக அனர்த்த முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகள், பிரதேச
செயலாளர்கள் மற்றும் தேர்தல் திணைக்கள அதிகாரிகள் ஒன்றுகூடி ஆராய்ந்து இதுவிடயமாக ஒரு வாரத்துக்குள் அரசாங்க அதிபரிடம் அறிக்கை ஒன்றை சமர்பிக்கும்படியும் தீர்மானிக்கப்பட்டது.

தேர்தல் வாக்களிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது இவ்வாறான பிரச்சனை இடம்பெறுமாகில் தேர்தலை உடனடியாக நிறுத்தமுடியாது. அது நடைபெற்றுக் கொண்டிருக்கும்.

இருந்தும் வெள்ளப்பெருக்காள் வாக்காளர்கள் அவ்விடத்துக்கு வந்து
வாக்களிக்க முடியாத நிலை ஒன்று தோன்றுமாகில் தேர்தல்கள் ஆணையாளரின் அனுமதிப்பெற்று இவை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பாதுகாப்பான ஒரு இடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின் தொடர்ந்து வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

இவ் வெள்ளப்பெருக்கு அபாயநிலை இரண்டு தினங்களுக்கு முன் தோன்றுமாகில் இது விடயமாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தெரியப்படுத்தி மாற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தீர்மானினக்க்பட்டது.

வாக்களிப்பு வேளையில் வெள்ளப்பெருக்கினால் மக்கள்
பாதிப்புக்குள்ளாகும்போது இவர்களுக்கான தேவைகளை கண்காணிக்கும் அதிகாரிகள் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தால் உடன் மாற்று வழியை மேற்கொண்டு இவ் அதிகாரிகள் ஊழியர்களை பாதிப்படைந்துவரும் மக்களுக்கு உதவி செய்ய அனுப்பிவைக்கப்பட வேண்டும் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் வெள்ளப்பெருக்கு காரணமாக மக்கள் பாதிப்புக்குள்ளாகும்போது
முப்படைகளும் உதவி செய்ய தயாராக இருப்பதாகவும் இவ் கூட்டத்தில்
தெரிவிக்கப்பட்டது.


தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது மன்னாரில் வெள்ளப்பெருக்கு எற்படுமாகில் மாற்றுவழி கையாளப்படும். Reviewed by Author on November 06, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.