அண்மைய செய்திகள்

recent
-

கனடாவில் தமிழர்களுக்கு வழங்கியுள்ள சுதந்திரம் இலங்கை தமிழர்களுக்கு சொந்தநாட்டிலே கிடையாது. மன்னார் பிரஜைகள் குழு

கனடாவில் வாழும் தமிழ் மக்களுக்கு அந்த அரசு வழங்கும் மதிப்பும்
மரியாதையும் இங்கு எங்கள் சொந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு
இல்லாது மொழியாலும் மதத்தாலும் பிரித்து அரசியலில் குளிர்காய்வதிலேயே அரசியல்வாதிகள் முனைந்து வருகின்றனர் என மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு இலங்கைக்கான கனடிய தூதுவரிடம் தெரிவித்தது.

இலங்கைக்கான கனடிய தூதுவர் செவ்வாய் கிழமை (29.10.2019) மன்னார்
பகுதிக்கு விஐயம் மேற்கொண்டபோது அன்று மன்னார் பிரiஐகள்குழுவின் ஆளுனர் சபையின் பிரதிநிதிகளை  பிரஜைகள் குழு வின் அலுவலகத்தில் சந்தித்தனர்.

மன்னார் மாவட்ட பிரiஐகள் குழுவின் தலைவர் அருட்பணி ஞாணப்பிரகாசம்
அடிகாளரின் தலைமையில் கலந்துகொண்ட ஆளுநர் சபையின் பிரதிநிதிகளின் சிலருடன் சந்தித்த  இலங்கைக்கான கனடிய தூதுவர்

நடைபெற இருக்கும் ஐனாதிபதி தேர்தல் காலத்தில் மன்னார் மாவட்டத்தின்
பாதுகாப்பு, மக்களின் மனநிலை மக்களின் நம்பிக்கை எவ்வாறு இருக்கின்றது,
இந்த தேர்தலில் இவ் மாவட்ட மக்கள் வாக்களிக்க ஆர்வமாக இருக்கின்றார்களா அல்லது ஆர்வமற்று இருக்கின்றார்களா என்பதை கனடிய தூதுவர் கேட்டறிந்தார்.

மக்கள் இவ் தேர்தலில் வாக்களிக்க இருக்கின்றார்களா என்பது  சக்தியற்ற
நிலையில் இருப்பதுடன் நம்பிக்கையற்ற நிலையிலேயே மக்களின் நிலை தற்பொழுது இருந்து வருகின்றது.

ஆனால் பிரiஐகள் குழுவாகிய நாங்கள் மக்களுக்கு தெரிவிப்பது நாம்
வாக்களிக்க தவறினோமென்றால் பாரதூரமான விளைவு எமக்குத்தான் உருவாகும் என தெரிவித்து வருகின்றோம்.

ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டும் என தெரிவிக்கும் அதேவேளையில் சரியான வேட்பாளரை தெரிவு செய்து வாக்களிக்குமாறு நாங்கள் வேண்டுகோள் விடுகின்றோம்.

2009 ஆம் ஆண்டில் எங்கள் தமிழ் மக்களில் சுமார் ஒரு இலட்சத்து
நாற்பதாயிரம் மக்கள்  வலிந்து காணாமல் போயிலுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.

இதில் ஒருவராவது வலிந்து காணாமல் போனதாக ஏற்றுக்கொள்ளாத அரசு எவ்வாறு ஒரு நீதியைத் தரும் என்பதுதான் தற்பொழுது மக்களிடம் இருக்கும் கேள்வியாக இருக்கின்றது.

இதுவரைக்கும் தமிழ் மக்கள் சுயமாக வாழக்கூடிய நிலைப்பாட்டை தங்களுக்கு தரவில்லையென இவ் பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
பொலிஸ் நிலையம் சென்றாலும் தங்கள் மொழியை புரிந்து கொள்ளாதவர்களே அதிகம் காணப்படுவதாக இருந்து வருகின்றது.

முன்பு எங்கள் நாட்டில் தமிழ் சிங்களப் பிரச்சனையென இருந்தது. இப்பொழுது
இந்தப் பிரச்சனையோடு சமயப் பிரச்சனையை கொண்டு வந்துள்ளனர்.

அரசானது சமயப் பிரிவுனையை தங்கள் கையில் எடுத்து செயல்படுகின்றனர்.
இவையும் அரசியல் மயமாக்கப்பட்டுள்ளதால் எங்கள் சமூகத்தின் மத்தியில்
இதுவும் ஒரு பெரும் பிரச்சனையாக தலைதூக்கியுள்ளது.

தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு சர்வதேச தலையீடு இல்லையெனில் ஒன்றும் செய்யமுடியாது என்ற நிலையே மக்கள் மத்தியில் இருந்து வருகின்றது. இந்த நாட்டில் எந்தவொரு நல்லாட்சி வந்தாலும் ஒன்றும் செய்யமுடியாத நிலையே இங்கு காணப்படுகின்றது. ஏனென்றால் இங்கு சிங்களமயமாக்கப்பட்ட நிலையே இங்கு காணப்படுகின்றது.

ஆகவேதான் நல்லாட்சி ஒன்று இந்த நாட்டில் உருவாகினாலும் அந்த ஆட்சியாளர் வெளியில் வரமுடியாத நிலையே இங்கு இருப்பதைக் காணலாம்.தமிழ் மக்கள் மத்தியில் சமாதானம் சமத்துவம் ஒன்று உருவாக வேண்டுமானால் கட்டாயம் சர்வதேசம்தான் தலையிட்டு செயல்பட வேண்டும் என்று நாம் கேட்டு நிற்கின்றோம்.

கனடாவில் தமிழ் மக்களை மதித்து அந்த அரசு செய்வதுபோல் எங்கள் சொந்த
நாட்டில் அவ்வாறான மதிப்புக்கிடையாது. அதற்கு உங்களைப்போன்ற நாடுகள்தான் உதவிக்கரம் நீட்ட வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக
திறந்திருக்கின்ற அலுவலகம் திறந்த மனதுடன் செயல்பட வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் பலர் பிரிந்து நின்று செயல்படுவதால்
எமது மன்னார் பிரiஐகள் குழு சில முன்னெடுப்புக்களை செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது.

அதாவது மாதாந்தம் 6000 ரூபா தருகின்றோம் என அரசு சொல்லுகின்றபோது இல்லை 10000 ரூபா தரும்படி கேட்கின்றனர். ஒரு சிலர்.

இவ் நிதியைப்பெற சம்மதிப்பார்களானால் ஓஎம்பியை ஏற்றுக்கொள்வதற்கு அடையாளமாகும்.

ஆனால் வெளியில் வந்து ஓஎம்பியை திட்டுபவர்களாகத்தான் பலர்
இருக்கின்றார்கள். எந்தவிடயமாக இருந்தாலும் எல்லோரும் நேர்மைத்
தன்மையுடன் செயல்பட வேண்டியது அவசியம் இருக்க வேண்டும்.

இன்னும் குறிப்பாக மன்னார் சதோச புதைகுழி காணியை எந்த நிறுவனத்துக்கோ அல்லது அமைப்புக்கோ கொடுக்காது அதை காணாமல் போனவர்களின் சரணாலயமாக மாற்றுவதற்கான நடவடிக்கைக்கு உதவிபுரிய வேண்டும் என மன்னார் பிரஜைகள் குழு இலங்கைக்கான கனடிய தூதுவரிடம் தெரிவித்தது.



கனடாவில் தமிழர்களுக்கு வழங்கியுள்ள சுதந்திரம் இலங்கை தமிழர்களுக்கு சொந்தநாட்டிலே கிடையாது. மன்னார் பிரஜைகள் குழு Reviewed by Author on November 01, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.