அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மற்றும் கண்டி கறிற்ராஸ்- வாழ்வுதயம் ஸ்தாபனங்களுக்கிடையில் மன்னாரில் இடம் பெற்ற நட்புறவு ரீதியிலான சர்வமத உறவுப்பால நிகழ்வு.fes

மன்னார் கறிற்ராஸ்-வாழ்வுதயம், மற்றும் கண்டி கறிற்ராஸ்-செற்றிக்   ஸ்தாபனங்களுக்கிடையிலான நட்புறவு ரீதியிலான சர்வமத உறவுப்பால நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மன்னாரில் இடம் பெற்றது.
மன்னார்  கறிற்ராஸ்-வாழ்வதய இயக்குனர் அருட்பணி செ.அன்ரன் அடிகளாரின் தலைமையில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.

-கண்டி கறிற்ராஸ்-செற்றிக்   ஸ்தாபனத்தின் இயக்குனர் அருட்பணி டெஸ்மன் பெரேரா அவர்களும், அவரோடு இணைந்து பொளத்த மதகுருக்கள், இஸ்ஸாமிய மௌலவிகள், இந்துமத குருக்கள், கத்தோலிக்க மதகுருமார்கள், கண்டி உதவிக்கல்விப்பணிப்பாளா,; மற்றும் ஏனைய அரச திணைக்கள அதிகாரிகள், மன்னார் மாவட்டத்தினைசேர்ந்த வாழ்வுதய இலக்கு கிராமங்களைச்சேர்ந்த கிராம அலுவலர்கள், வாழ்வதய பணியாளர்கள் என பலர் இவ் நட்புறவு ரீதியிலான சர்வமத உறவுப்பால நிகழ்வில் பங்கெடுத்துள்ளனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை   மன்னார் கறிற்ராஸ்-வாழ்வுதயத்தின் அலுவலக கேட்போர் கூடத்தில் ஆரம்ப வரவேற்பு நிகழ்வும், பல் சமய தலைவர்களின் கருத்துரைகளும் இடம்பெற்றது.

 இவ் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி ஏ . விக்ரர் சோசை அடிகளார் கலந்து சிறப்பித்தார்.
 இவ் கலந்துரையாடலானது வெளிப்படைத்தன்மையுடன் சிறப்பாக இடம்பெற்றது.

இதில் குறிப்பாக உரைநிகழ்த்திய அனைத்து மதத்தலைவர்களும், மனித நேயம், மத நல்லிணக்கம், மத சுதந்திரம், போன்றவைகளை சமகாலத்தில் பாதுகாக்கவும், மதிக்கவும் வேண்டியதன் அவசியத்தினை விரிவாக எடுத்து கூறினர்.

 குறிப்பாக அனைத்து மதத்லைவர்களினதும் ஒருமித்த கருத்ததாக   மதமானது அரசியல் மயப்படுத்தப்படுவதினை தவிர்த்து உண்மைத் தன்மையான சுதந்திரமாக மத விழுமியங்களை மதிக்கக்கூடிய நிலை எமது நாட்டில் ஏற்படவேண்டும் என்கின்ற கருத்துக்களும் பிரதானமாக முன்வைத்தனர்.

-இந்த நிலையில் இன்று புதன் கிழமை  சர்வமத குழுவினர் மன்னார் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அனைத்து மத யாத்திரைஸ்தலங்களையும் தரிசித்தனர்.குறிப்பாக மன்னார் வேதசாட்சிகளின் திருத்தலம், திருக்கேதீஸ்வர   ஆலயம், மாந்தை பௌத்தவிகாரை, அடம்பன் பள்ளிவாசல், மற்றும் மடுமாதாவின் புனித பூமியையும் தரிசித்து அங்கும் கலந்துரையாடல்களை மேற்கொண்டதன் பின்னர் இக்குழுவினர் தமது உறவுப்பால நிகழ்வினை பூர்hதி செய்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.




மன்னார் மற்றும் கண்டி கறிற்ராஸ்- வாழ்வுதயம் ஸ்தாபனங்களுக்கிடையில் மன்னாரில் இடம் பெற்ற நட்புறவு ரீதியிலான சர்வமத உறவுப்பால நிகழ்வு.fes Reviewed by Author on November 20, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.