அண்மைய செய்திகள்

recent
-

வாழ்வாதார கடன் உதவியானது குழுக்களின் நாணயத் தன்மையே-மன்னார் கறிற்ராஸ்-வாழ்வுதயத்தின் இயக்குனர் அருட்பணி செ.அன்ரன் அடிகளார்-(படம்)

மன்னார் கறிற்ராஸ் வாழ்வுதயத்தினால் விவசாயக் குடும்பங்களுக்கு வாழ்வாதார கடன் உதவி  வழங்கும்  திட்டமானது மக்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டிற்கு மிகவும் உறுதுணையாக உள்ளது   எனவும்,குறித்த கடன் திட்டத்தை பெற்றுக்கொண்டவர்கள் சிறந்த முறையில் பயணடைய வேண்டும் என மன்னார் கறிற்ராஸ்-வாழ்வுதயத்தின் இயக்குனர் அருட்பணி செ.அன்ரன் அடிகளார் தெரிவித்தார்.

-மன்னார் கறிற்ராஸ்-வாழ்வுதயத்தினால் கிராம மட்டத்தில் இயங்கும் சிறு குழுக்களில்  200 பயனாளி குடும்பங்களுக்கு கால போக நெற் செய்கைக்கான விவசாயக் கடனானது கறிற்ராஸ்-வாழ்வுதயத்தின் இயக்குனர் அருட்பணி செ.அன்ரன் அடிகளார் தலைமையில் இன்று புதன் கிழமை (13) காலை மன்னார் கறிற்ராஸ்-வாழ்வுதயத்தில் வைத்து வழங்கப்பட்டது.

-இதன் போது உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,,

மக்களின் சமூக பொருளாதார முன்னேற்றித்தினை கருத்தில்  கொண்டு கிராம மட்டங்களில் வாழ்வுதயத்தின் கீழ் சிறு குழுக்களாகவும், சமூக மட்ட அமைப்பாகவும் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக சிறப்பாக இயங்கும் குழுக்களுக்கு வாழ்வுதயமானது,  மக்கள் மீள் குடியேற்றப்பட்டதன் பின்பும் ஒவ்வொரு ஆண்டும் விவசாயத்திற்கான கடன் உதவியினை வழங்கிவருகின்றது.

 இக் கடனானது இவ்வாண்டும் குழுக்களின் நாணயத்தன்மையினை மையமாகவைத்தே வழங்கப்படுகின்றது.இத் திட்டமானது மக்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டிற்கு மிகவும் உறுதுணையாக உள்ளது.

இக் கடனை பெறும் பயனாளிகள் இவ் உதவியின் மூலம் தங்களது விவசாய நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.
கறிற்ராஸ்-வாழ்வுதயமானது மன்னார் மறைமாவட்டத்தில் பல்வேறுபட்ட மனித நேயப் பணிகளை கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து ஆற்றிவருகின்றமை யாவரும் அறிந்ததே.

இத்தொண்டு நிறுவனத்தின் 11 செயற்பாட்டுப்பிரிவுகளில் ஒரு பிரிவாக விளங்கும் ஒருங்கிணைந்த முழு மனித அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழ் கிராம மட்டங்களில் இயங்கும் குழுக்களுக்கே இவ் உதவி வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.





வாழ்வாதார கடன் உதவியானது குழுக்களின் நாணயத் தன்மையே-மன்னார் கறிற்ராஸ்-வாழ்வுதயத்தின் இயக்குனர் அருட்பணி செ.அன்ரன் அடிகளார்-(படம்) Reviewed by Author on November 13, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.