அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பகுதியில் விவசாயப் பகுதியில் சரியான முறையில் வடிகாலமைப்பு மேற்கொள்ளாமையாலேயே வெள்ளத்தால் விவசாயம், மக்கள் பாதிப்பு. தவிசாளர் செல்லத்தம்பு

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியிலுள்ள நீர்பாசன
வாய்க்கால்கள் சரியான முறையில் பேணப்படாத நிலையின் காரணமாகவே மக்கள் வெள்ளத்தில் மிதக்க வேண்டிய நிலை உருவாகியிருப்பதுடன் விவசாயங்களும் பாதிப்புக்கு உள்ளாகுவதாக மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஆசீர்வாதம் செல்லத்தம்பு இவ்வாறு தெரிவித்தார்.

தற்பொழுது மன்னார் பகுதியில் பெய்துவரும் மழை வெள்ளம் சம்பந்தமாக மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஆசீர்வாதம் செல்லத்தம்புவுடம் வினவியபோது அவர் மேலும் தெரிவிக்கையில்

தற்பொழுது மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் மழையினால் பாதிப்பு அடைந்துள்ள மக்களின் நிலையைப்பற்றி மன்னார் மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர் செல்லத்தம்பு தெரிவிக்கையில்

தற்பொழுது மன்னார் பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் பல இடங்கள் வெள்ளத்தால் மூழ்கி காணப்படுகின்றது.

சில கிராமங்களிலுள்ள வீடுகள் அமைந்துள்ள இடங்கள்  நீரில் மூழ்கியுள்ளதால் மக்கள் வீடுகளில் இருக்க முடியாத நிலையை காணக்கூடியதாக இருக்கின்றன.அத்துடன் 2019ஃ2020 ஆம் ஆண்டு காலபோகம் நெற் செய்கை செய்யப்பட்டுள்ள பலரின் விவசாயங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

தற்பொழுது கட்டுக்கரைக்குளத்தின் துருசுகள் பூட்டப்பட்டிருக்கின்றபோதும்
இவ் குளத்திலிருந்து 4 அங்குலம் நீர் வான்பாய்ந்துக் கொண்டிருக்கின்றது.

இப்பகுதி மக்கள் விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு
வருகின்றனர். இதன் காரணமாகவும் மக்கள் வெள்ளத்தின் காரணமாக இடம்பெயர முடியாத நிலையில் இருக்க காணப்படுகின்றனர்.

காரணம் தங்கள் வாழ்வாரத்துக்கு ஈடுகொடுத்து வரும் கால்நடையை விட்டுச்
செல்ல முடியாத நிலை. மற்றது கள்ளர்களின் அச்சத்தால் வீட்டைவிட்டு செல்ல முடியாத நிலை என தெரிவித்து வருகின்றனர்.

கடந்த ஓரிரு தினங்களாக இப் பகுதியில் மழை கடுமையாக இருந்தமையால்
குறிப்பாக வாமதேவபுரம், அடம்பன், வேப்பங்குளம், வேட்டையார்முறிப்பு போன்ற பகுதிகளில் பெரும்வெள்ளம் காணப்படுகின்றது.

நான் எனது பிரதேச சபை பகுதிகளை சுற்றிப்பார்த்து வந்தபொழுது
பரப்புக்கடந்தான் மற்றும் சில பகுதிகளிலுள்ள விவசாய நிலங்கள் நீரினால்
மூழ்கி செய்கைப்பண்ணப்பட்ட விவசாயம் பாதிப்புக்குள்ளாகிய நிலைக்கு
தள்ளப்பட்டுள்ளது.

பெரிய, சின்னஉடைப்பு வாய்க்காலகள்; பகுதிகளிலுள்ள ஆட்காட்டிவெளி,
ஆலங்குளம், வட்டக்கண்டல் போன்ற வயல்கள் நீரால் முற்றாக மூடப்பட்டுள்ளன. இவ் நிலை மன்னாரில் மேலும் தொடருமாகில் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகும் நிலை உருவாகும் என்ற அச்சம் மக்கள் மத்தியில்
இருந்து வருகின்றது.

இப் பகுதியில் சுமார் 12 ஆயிரம் ஏக்கர் விவசாயம் பாதிப்புக்குள்ளாகும்
நிலை தற்பொழுது உருவாகியுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் துன்பத்துக்கு ஆளாகியிருப்பதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.
இலுப்பைக்கடவை பகுதியில் மீள்குடியேறியுள்ள மக்களுக்கு குடியேறுவதற்கு பள்ளக்கையிலுள்ள அரச காணிகளை வழங்கியுள்ளனர்.

தற்பொழுது நான் அதை பார்வையிட்டபொழுது குடியிருப்புக்குள் வெள்ளம்
மூழ்கியிருப்பதுடன் அவ் நீரை வெளியேற்ற முடியாத நிலையில் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளதாக காணக்கூடியதாக இருக்கின்றது.

இதனால் வீடுகளிலுள்ள குழந்தைகளை 24 மணி நேரமும் கண்காணித்துக்
கொண்டிருக்க வேண்டிய நிலை இங்கு காணப்படுவதுடன் நோய்களுக்கும் உள்ளாக வேண்டிய ஒர அச்சம் இப் பகுதிகளில் தோன்றியுள்ளன.

நான் தற்பொழுது இந்த வெள்ளப் பெருக்கை கவனிக்கும்பொழுது சகல விவசாயப் பகுதிகளிலும் வடிகால் அமைப்பு சரியான முறையில் பேணப்படாத நிலையே காணப்படுகின்றது. இதனால் நீர்பாசன திணைக்களம் கூடிய கவனம் செலுத்த வேண்டிய நிலைப்பாடு இங்கு இருக்கின்றது.

இதனால் எங்கள் மாந்தை மேற்கு பிரதேச சபை நேற்றுத் தொடக்கம் பெக்கோ மூலம் குறிப்பிட்ட இடங்களில் வாய்க்கால் துப்பரவு செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றோம் என்றார்.





மன்னார் பகுதியில் விவசாயப் பகுதியில் சரியான முறையில் வடிகாலமைப்பு மேற்கொள்ளாமையாலேயே வெள்ளத்தால் விவசாயம், மக்கள் பாதிப்பு. தவிசாளர் செல்லத்தம்பு Reviewed by Author on December 02, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.