அண்மைய செய்திகள்

recent
-

முஸ்லிம் மக்களை இல்லாதொழிக்க முயற்சி: ரிசாட்பதியூதீன் MP-


முஸ்லிம்களுக்கு இருக்கின்ற இரண்டு கட்சிகளை அழித்தொழிக்க கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றார்கள் என முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுத்தீன் தெரிவித்தார்.
கந்தளாயில் இன்று (1) நடைபெற்ற மக்கள் சந்திப்பிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
நாட்டிற்கு புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொறுப்பேற்றுள்ளார்கள். இந்நாட்டில் வாழுகின்ற அனைத்து மக்களும் பாரபட்சமின்றி நடத்துவோம் என அறிவித்துள்ளார். ஜனாதிபதி கூறியது போன்று நடாத்தினால் சரியாகும்.
இந்நாட்டில் முஸ்லிம் மக்களை இல்லாதொழிக்கவே முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். அத்தோடு கடந்த ஜனாதிபதி தேர்தலிலே நமது வேட்பாளர் தோல்வியுற்றாலும், நாம் தோற்கவில்லை. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் வரலாறு காணாத வெற்றிகளை கண்டுள்ளோம். சிறு பான்மை மக்களின் அபிலாசைகள் எண்ணங்களை உலக நாடுகள் உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றன.

இந்நாட்டில் வாழுகின்ற சிறுபான்மை மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்ற தேர்தலாக அமைந்தது. அமைதியாக வாழுகின்ற முஸ்லிம் மக்களை சிங்கள பௌத்த தேரர்களை வைத்துக்கொண்டு பயம் காட்டி இல்லாத பொல்லாத அபாண்டங்களை சுமத்தி வருகின்றார்கள்.
நாட்டின் வளர்ச்சிக்கும் பொருளாதாரத்திற்கும் எத்தனையோ முஸ்லிம் நாடுகளிடாம் மண்டியிட்டு பொருளாதாரத்தை பெற்றுக்கொடுத்தும் இன்று என்னை கைது செய்ய வேண்டும், பொல்லாத அபாண்டங்களை சுமத்தி குற்றச் சாட்டுகளை கூறி வருகின்றார்கள். முஸ்லிம் சமூகத்தினை வழி தவற பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
நாம் இந்நாட்டில் பற்றுள்ளவர்கள், தலைமைத்துவத்தை அடக்குவதன் மூலம் முஸ்லிம் வாக்குகளையும் முஸ்லிம்களின் செயற்பாட்டினை பெறலாம் என நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

முஸ்லிம் மக்களுக்காக எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் நாம் அதற்காக ஆயுதம் ஏந்தியவர்கள் இல்லை.
எனவே தான் அரசியல் தலைமைகளில் பிழைகள் இருந்தால் பொலிஸில் முறைப்பாடு செய்யுங்கள் சில பௌத்த தேரர்கள் நீதிபதிகள் போன்று செயற்படுகின்றார்கள். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எப்போதும் மக்களுக்காகவே செயற்பட்டுக்கொண்டிருக்கும் என்றார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

முஸ்லிம் மக்களை இல்லாதொழிக்க முயற்சி: ரிசாட்பதியூதீன் MP- Reviewed by Author on December 02, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.