அண்மைய செய்திகள்

recent
-

அம்மாச்சி உணவகத்தால் தொற்றா நோயை விரட்டக்கூடிய வாய்ப்பு ஏற்படுகின்றது-மன்னார் அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ்.

அம்மாச்சி உணவகம் திறக்கப்பட்டுள்ளதால் போசாக்கு மற்றும் சுடசுட உணவை பெறுவது மட்டுமல்ல தொற்றா நோயை விரட்டக்கூடிய நல்லதொரு வாய்ப்பு மன்னாருக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் இவ்வாறு தெரிவித்தார்.

திங்கள் கிழமை (23.12.2019) மன்னாரில் அம்மாச்சி உணவக திறப்பு விழா
மன்னார் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் கே.எம்.ஏ.சுகூர் தலைமையில்
இடம்பெற்றபோது இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தொடர்ந்து உரையாற்றுகையில்


-இன்று (23.12.2019) திங்கள் கிழமை மன்னாரில் திறக்கப்பட்டுள்ள இவ்
அம்மாச்சி உணவகம் சுமார் ஒரு வருடத்துக்கு மேலாக இங்கு திறக்கப்பட
வேண்டும் என்று திட்டமிடப்பட்டது.

-அந்தவகையில் இப்பொழுது இது வெற்றிகரமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நான் இவ் மாவட்டத்தின் செயலாளர் என்ற வகையில் நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன்.

-இவ் உணவகத்தை விரும்பியோர் பலர். இந்த போசாக்கு கொண்ட உணவை பெறுவதற்காகஉயிலங்குளம் சென்று ஏமாற்றத்துடன் திரும்பி வந்தவர்களும் பலர்.ஏனென்றால் அங்கு உணவு கிடைப்பதில்லை. இதன் செயல்பாட்டை நாம் சற்று கவனத்தில் கொள்ள வேண்டும்.

-நமது பிரதி சுகாதாரப் பணிப்பாளருக்குத் தெரியும் தற்பொழுது தொற்றா
நோய்களுக்கு முக்கிய காரணம் உணவு முறையே. ஆகவே இந்த உணவு முறையிலே நாம் பல சிரமங்களுக்கு உள்ளாகின்றோம். எல்லோருக்கும் உண்ணுவதில் விருப்பம். ஆனால் எவ்வளவு உண்ணுகின்றோம் எதை
உண்ணுகின்றோம் என்பதுதான் தெரியாது.

-எம்மில் மாமிசம் உண்ணுபவர்கள் அதிகம். சூடான, சுவையுள்ள, அதிலும்
போசாக்கு கொண்ட உணவுகளை வீட்டைவிட வேறு இடங்களில் பெறுவது அரிது. ஆனால் இந்த சந்தர்ப்பம் மன்னார் மாவட்டத்துக்கு கிடைத்திருப்பதில் நாம் மகிழ்ச்சி அடைய வேண்டும். சூடான, சுவையான போசாக்கு உணவை பெறுவதற்கு.

-இங்கு பெறும் உணவை சத்துள்ள உணவு என்று சொல்வதைவிட நிறை போசாக்கு உணவு என்று சொல்லலாம்.

-இதனால் தொற்றா நோயை விரட்டக்கூடியதாக இருக்கும். ஆகவே இவ் உணவகம் மிகவும் சிறந்த முறையில் இயங்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோளாக இருக்கின்றது.

-இதற்கு நாம் எல்லோரும் இணைந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இங்குள்ள செயல்பாடு சிறப்பாக அமைவதற்கு. இங்கு மக்கள் வருகின்றபொழுது மூடப்பட்டு இருக்கின்றது என தெரிவித்து
ஏமாற்றம் அடையாத நிலையில்  தொடர்ந்த சேவையாக அமைய வேண்டும் என தெரிவித்தார்.

அம்மாச்சி உணவகத்தால் தொற்றா நோயை விரட்டக்கூடிய வாய்ப்பு ஏற்படுகின்றது-மன்னார் அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ். Reviewed by Author on December 26, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.