அண்மைய செய்திகள்

recent
-

ஆர்ப்பாட்டம் மாத்திரம் எங்களுக்கு ஒரு தீர்வை பெற்றுத்தராது- மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை ஞானப்பிரகாசம் அடிகளார்.படங்கள்

தமிழ் மக்கள் மத்தியிலே ஒற்றுமை இல்லை.எல்லா இடத்திலுமே பிரிவுகள் உள்ளது.இதனால் எதற்கும் உடனடி தீர்வை பெற்றுக்கொள்ள முடியாது என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை ஞானப்பிரகாசம் அடிகளார் தெரிவித்தார்.

-மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் விசேட சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் மன்னார் கலையருவி மண்டபத்தில் இடம் பெற்றது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்கள் கலந்து கொண்டனர்.இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

-அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,,,

காணாமல் ஆக்கப்பட்டோர் விடையத்தில் பெண்கள் வீதியில் இருப்பது கொஞ்சம் கூட எமக்கு பிடிக்கவில்லை.போராட்டத்தினை வேறு முறைகளில் நாம் கையாள வேண்டும்.இன்று வரை வவுனியாவில் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-நான் ஏதோ ஒரு வகையில் அவர்களை ஊக்கப்படுத்துகின்றேன்.முதலில் போரட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் தற்போது போராட்டத்தின் வடிவத்தை மாற்ற வேண்டியுள்ளது.

பல விதமான பிரச்சினைகள் வந்து கொண்டிருக்கின்றது.  போராட்ட காலம் நீடிக்க நீடிக்க  பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கின்றது.எமக்கிடையே பிளவுகள் ஏற்பட்டுள்ளது.பிளவுகளினால் சுமார் 300 பேர்கள் வரை இணைந்து முன்னெடுத்த போராட்டத்தில் தற்போது குறைந்த எண்ணிக்கையுடையோருடன் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாங்கள் தற்போது வீதியில் இறங்கி போராட முடியாது என்று இல்லை.எந்த அரசாங்கம் வந்தாலும் செய்ய முடியும்.யார் வந்தாலும் இது உங்களுடைய போராட்டமாக இருக்க வேண்டும்.அந்த சக்தி உங்களிடமே இருக்கின்றது.அந்த சக்தியை ஒன்று சேர்ப்பதும் நெறிப்படுத்துவதுமே எங்களுடைய கடற்பாடு.

குறிப்பாக உங்களுக்கு வாழ்வாதார பிரச்சினை உள்ளது.அதனால் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் (ஓ.எம்.பி) சொல்லுகின்றது பாதீக்கப்பட்டவர்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் கொடுப்பணவு தருகின்றோம் என்று. எங்களுடன் உள்ளவர்கள் பிரிந்து  நிற்கின்றமையினால் ஒரு விடையத்தையும் ஒற்றுமையாக முன்னெடுக்க முடியாத நிலை உள்ளது.
எங்களுடைய போராட்டம் இவர்கள் தரும் 6 ஆயிரம் அல்லது 12 ஆயிரம் ரூபாவிற்குள் முடக்கப்பட்ட போராட்டம் இல்லை.

நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒரு குடைக்குள் வர வேண்டும்.நாங்கள் ஒன்றாக செயல்பட்டால் மட்டுமே எமது போராட்டத்தின் வழு அதிகரிக்கும்.

காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள் இல்லை என்று சொல்லக்கூடாது.அவர்கள் இல்லை என்று சொன்னால் எங்கே அவர்கள்?இருந்தால் எங்களிடம் ஒப்படையுங்கள்.அதன் பின்  விசாரனைகளை செய்யுங்கள் என்கின்ற நியாயமான கோரிக்கையே எம்மிடம் உள்ளது.

-எமது கோரிக்கை சர்வதேச ரீதியாக அங்கிகரிக்கப்பட்ட கோரிக்கை.எமது கோரிக்கையினை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளுகின்ற விதத்தில் முன்னெடுத்து  எமது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.

-தமிழ் மக்கள் மத்தியிலே ஒற்றுமை இல்லை.எல்லா இடத்திலுமே பிரிவுகள் உள்ளது.தமிழ் தேசியக்கூட்டமைப்பை பார்த்தால் பிரிந்து காணப்படுகின்றது. தமிழர்களுக்கு ஒரு தீர்வை கொடுக்க முடியாத நிலை உள்ளது.வடக்கில் ஒரு ஆளுனரை நியமிக்க முடியாத நிலை காணப்பட்டது.

-இப்படியாக ஒரு அரசியல் சூழ்நிலை காணப்படுகின்ற நிலையில் எங்களுடைய போரட்டக் களத்திலே நாம் தெழிவாக இருக்க வேண்டும்.
-எனவே நீங்கள் உங்கள் பிள்ளைகளை,உறவுகளை தேடிச் செல்லுகின்ற போது இதற்கான பொறுப்புக் கூறலை அரசு கூற வேண்டும் என நாங்கள் தொடக்கத்திலே சொல்லி வருகின்றோம்.

-உங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டும்.ஓ.எம்.பி க்கு தெரியும் உங்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை என்று.சர்வதேசம் கூட இன்று சிந்தித்தே செயல் படுகின்றது. தமிழர்களை நம்பி நிற்கலாமா? கூட்டமைப்பை நம்ப முடியுமா?அரசியல் அமைப்பை நம்ப முடியுமா?காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களின் போராட்டம் 3 அல்லது 4 ஆக வெடித்துள்ளது.

ஒவ்வெருவரும் ஒவ்வெறு திசையில் நின்று போராட்டங்களை முன்னெடுகின்றனர். இவர்களை நாம் எப்படி ஒன்று சேர்ப்பது என சர்வதேசம் சிந்தித்தக்கொண்டு இருக்கின்றது.

இதற்கு காரணமும் நாங்கள் தான்.ஆர்ப்பாட்டம் மாத்திரம் எங்களுக்கு முடிவை தராது.நாங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் ஒரே குடையின் கீழ் செயல்பட வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.







ஆர்ப்பாட்டம் மாத்திரம் எங்களுக்கு ஒரு தீர்வை பெற்றுத்தராது- மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை ஞானப்பிரகாசம் அடிகளார்.படங்கள் Reviewed by Author on December 20, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.