அண்மைய செய்திகள்

recent
-

கால்வாய்கள் சீராக புனரமைக்கப்படாமையாலே விவசாயம் பாதிப்பு சட்டபூர்மற்ற முறையில் நெற்செய்கையில் ஈடுபட்டவிவசாயிகளே பாதிப்பு-நீர்பாசன பொறியியலாளர்.

மன்னார் கட்டுக்கரைக்குளத்தின் கீழுள்ள சின்ன  உப்போடை வாய்க்கால் கீழுள்ள விவசாயம் வெள்ளத்தால் பாதிப்படைந்ததுக்கு முக்கிய காரணம்
கண்டல்குளத்திலுள்ள வானை உயர்த்தி கட்டப்பட்டமையே ஆகும் என சின்ன உப்போடை கட்டுக்கரைகுளம் தலைவர் எட்வேட் இவ்வாறு தெரிவித்தார்.

அதேநேரத்தில் விவசாய கூட்டங்களில் எடுக்க்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக நடக்காத விவசாயிகள் குளக்கட்டுக்குள்ளும், மற்றும் காலம் தாழ்த்தி விவசாயம் மேற்கொண்டவர்களே தற்பொழுது விவசாய நெற்செய்கையில் பாதிப்பு அடைந்து வருவதாக முருங்கள் பிரதேச நீர்பாசன பொறியியலாளர் ப.அருள்ராஜ் இவ்வாறு தெரிவித்தார்.

 இதுவிடயமாக சின்ன உப்போடை கட்டுக்கரைகுளம் தலைவர் எட்வேட்  மேலும் தெரிவிக்கையில்

எமது பகுதியில் நீர்பாசனத்து திணைக்களத்துக்கு உட்பட்ட வாய்க்கால்கள்
சரியான முறையில் புனரமைக்கப்படாததினதால் மன்னார் பகுதியில் எதிர்பாராத வண்ணம் மழை பெய்து கொண்டிருப்பதால் எமது விவசாயம் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றது.

எமது கடடுக்கரைக்குளத்துக்கு கீழுள்ள  சின்னஉப்போடை ஊடாக கடலுக்கு
தண்ணீர் ஊடுறுத்து செல்லுகின்ற கண்டல்குளத்திலுள்ள வான் உயர்த்தி
கட்டப்படதாலேயும் தற்பொழுது ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் எமது பகுதி வெள்ளாமை மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றது.

தற்பொழுது எங்கள் பகுதியில் 1200 ஏக்கர் விவசாயம் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. இந்த வானை எந்த விதத்திலும் கடலுக்கு செல்லும் நீரை தடுக்கா வண்ணம் அதை உடைத்து திறந்து தரப்பட வேண்டும் என நாங்கள் வேண்டி நிற்கின்றோம்.

கட்டப்பட்ட இந்த வானை உடைப்பதற்கு நிறைவேற்று பொறியியலாளர் சென்ற வருடம் அனுமதி வழங்கியிருந்தபோதும் அது இதுவரைக்கும் நடைமுறப்படுத்தாது. இருந்தமையாலேயே தற்பொழுது இவ் விவசாய அழிவுக்கு உள்ளாகியுள்ளது கவலைக்குரியது.

இதை உடைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் இது சம்பந்தமான அதிகாரிகள் கவனம் செலுத்தபடாமைக்கான காரணம் என்னவென்று எங்களுக்கு தெரியிவில்லை.

மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் எங்கள் பகுதி விவசாயிகள் இந்த
செயல்பாட்டினால் தங்கள் விவசாய அழிவுக்கு தள்ளப்பட்ட நிலையில் இருப்தால் கண்டல்குளத்திலுள்ள வானை உடன் உடைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு மேலும் விவசாயத்தில் பாதிப்படையா வண்ணம் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்
என நாம் வேண்டி நிற்கின்றோம்.

அத்துடன் இப்பகுதியில் நீர்பாசனத்துக்குரிய வாய்க்கால்கள் எவ்வாறு
அமைக்கப்பட வேண்டும், எங்கு அணைக்கட்டப்படல் அதாவது மறிக்கப்பட வேண்டும் என நீர்பாசனத் திணைக்களம் கவனம் செலுத்தப்படல் வேண்டும்.
ஆனால் இதுவிடயத்தில் நீர்பாசனத் திணைக்களம் இதை பார்வையிட்டு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அனால் இவர்கள் இதுவிடயத்தில் அசமந்த போக்கை கடைப்பிடித்து வருகின்றனர்.

கட்டுக்கரைக்குளம் சம்பந்தமாக நடைபெற்றுவரும் கூட்டங்களில் நாங்கள்
இதுவிடயமாக பல முறை எங்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றோம்.

ஆனால் இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுபடாத நிலையிலேயே இது காணப்படுகின்றது. அதாவது கழிவு நீரை கடலுக்கு செலுத்தும் நடவடிக்கையாகவே நாங்கள் இவ் திட்டத்தை முன்வைத்து வருகின்றோம்.

கடனைப்பெற்று விவசாயம் செய்யும் விவசாயிகள் திணைக்களத்தின்
அசமந்தப்போக்கால் காலத்துக்கு காலம் இவ்வாறான அழிவை நோக்கியதாகவே இருந்து வருகின்றனர் என்றார்.

இது விடயமாக முருங்கன் பிரதேச நீர்பாசன பொறியியலாளர் ப.அருள்ராஐ;
தெரிவிக்கையில் தற்பொழுது மன்னார் மாவட்டத்தில் தொடர்ந்து பல நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக குளங்கள் நிரம்பி வருகின்றபோதும் குளங்களுக்கு சேதம் ஏற்படாவண்ணம் நக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அத்துடன் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் தாங்கள் தக்க
நடவடிக்கைகளை நாளாந்தம் சம்பவ இடங்களுக்குச் சென்று மேற்கொண்டு
வருகின்றோம். இருந்தபோதும் சில விவசாயிகள் விவசாய கூட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கு மாறாக செயல்பட்டு வந்தமையாலேயே தற்பொழுது மன்னாரில் பெய்துவரும் மழையின் காரணமாக பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

ஒன்று காலம் தாழ்த்தி விதைத்தவர்கள். மற்றையது சட்டபூர்வமற்ற முறையில் குளப்பகுதிகளில் விதைத்தவர்களே தற்பொழுது அழிவுக்குள்ளாகி வருவதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறான சம்பவமே சின்ன உப்போடை குளப்பகுதியிலுள்ள விவசாயிகளுக்கும் ஏற்பட்டுள்ளதுடன் இவ்வாறு சட்டபூர்வமற்ற விவசாயிகளுக்கும் இடம்பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.



கால்வாய்கள் சீராக புனரமைக்கப்படாமையாலே விவசாயம் பாதிப்பு சட்டபூர்மற்ற முறையில் நெற்செய்கையில் ஈடுபட்டவிவசாயிகளே பாதிப்பு-நீர்பாசன பொறியியலாளர். Reviewed by Author on December 08, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.