அண்மைய செய்திகள்

recent
-

ஜனாதிபதி வேட்பாளராக மக்களின் வாக்குகளை பெறுவதற்காகவே திட்டமிடாமல் வீட்டு திட்டங்களை சஜித் பிரேமதாஸ நடைமுறைபடுத்தினார்- K.மஸ்தான்MP தெரிவிப்பு

ஜனாதிபதி வேட்பாளராக மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காகவே திட்டமிடாமல் வீட்டுத் திட்டங்களை வழங்கி தற்போது மக்களை சிரமத்திற்கு சஜித் பிரேமதாசா உள்ளாக்கியுள்ளதாக காதர் மஸ்தான் அவர்கள் குற்றம் சுமத்த்கியுள்ளார்

இன்றைய தினம் உப்புக்குளம் பகுதியில் உள்ள அவருடைய  அலுவலகத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில்

குறித்த வீட்டுதிட்டம் தொடர்பான விடயங்கள் தொடர்பாக தொடர்சியாக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் உரையாடியுள்ளோம் வரவு செலவு திட்டத்தின் ஊடாக ஒதுக்கியிருந்த நிதியை விட அரசியல் நோக்கத்த்கிற்காக கண்டபடி வீட்டு திட்டங்களை கொடுத்துள்ளனர் திட்டமிடல் இல்லாத செயற்பாடுகளால் தான் மக்களை தற்போது மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது

புதிய அரசாங்கம் என்ற வகையில் மக்களுக்கான இவ் நிதியை வழங்குவதற்கான முயற்சிகளை செய்து கொண்டு இருக்கின்றோம் உயர் மட்டத்திடமும் பிரதமரிடமும் ராஜாங்க அமைச்சரிடமும் பேசியுள்ளோம்

அவர்கள் விரைவில் ஒரு குழுவை எமது பகுதிக்கு அனுப்பி மாவட்ட ரீதியில் வழங்கபடவேண்டிய நிதிகள் தொடர்பாக அறிக்கையை சமர்பிக்க உள்ளதாக தெரிவித்தார்

அத்துடன் ஆளும் கட்சி என்ற வகையில் மக்கள் எதிர்கொண்டுள்ள இப்பிரச்சினையை நிவர்தி செய்வது எமது பொறுப்பு என்பதன் அடிப்படையில் அவர்களுக்கான நிதியை பெற்று கொடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம் எனவும் விரைவில் அவர்களுக்குரிய நிதியை பெற்று கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்

மன்னார் மாவட்ட ரீதியில்கடந்த 2019 ஆண்டு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால்  நடைமுறைப்படுத்தப்பட்ட 85 மாதிரி கிராமங்களுக்கான 2341 வீடுகளுக்கான 1388.765  மில்லியன் ரூபாயும் 2018 ஆண்டு நடைமுறைபடுத்தப்பட்ட 855 வீடுகளுக்கான 105.405 மில்லியன் ரூபாவும் இன்னமும் பொது மக்களுக்கு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கதாகும்.

ஜனாதிபதி வேட்பாளராக மக்களின் வாக்குகளை பெறுவதற்காகவே திட்டமிடாமல் வீட்டு திட்டங்களை சஜித் பிரேமதாஸ நடைமுறைபடுத்தினார்- K.மஸ்தான்MP தெரிவிப்பு Reviewed by Author on January 16, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.