அண்மைய செய்திகள்

recent
-

இந்தியாவுக்கு எதிராக வருகிறது ஐரோப்பிய யூனியனின் தீர்மானம் ! -

இந்தியா நிறைவேற்றியுள்ள CAA தவறானது என்று ஐரோப்பிய யூனியன் ஒரு தீர்மானம் கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
CAA இன ஒற்றுமையை குழப்பி விடும் என்றும் ஐரோப்பிய யூனியன் தீர்மானம் இறைவேற்றும் நோக்கில் நகர்ந்து வருகின்றது.

இந்தியா நிறைவேற்றியுள்ள CAA தீர்மானத்தில் ஐரோப்பிய யூனியன் கரிசனை காட்டும் நோக்கமானது இந்தியாவில் CAA யை கையில் எடுத்துக் கொண்டு சிறுபான்மை இனங்களுக்கு எதிராக தாக்குதல்கள் அதிகரிக்குமானால் இந்தியாவில் இருந்து சுமார் 50 லட்சம் அகதிகள் படையடுத்தால் அந்த அகதிகளை 26 நாடுகள் கொண்ட ஐரோப்பிய யூனியன் உள்வாங்க வேண்டி வரும் என்று ஐரோப்பிய யூனியன் அஞ்சுகின்றது.
மிகப்பெரிய அகதிகள் உள்வாங்கும் பிரச்சினையை ஐரோப்பிய யூனியன் நாடுகள் எதிர்நோக்க வேண்டி வரும். இது ஒருபுறமிருக்க இந்தியா ஐநா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடாக இணைந்துகொள்ளும் ஆசையில் கனவில் இருக்கின்றது.

இந்த நிலையில் ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம் இந்தியாவுக்கு எதிராக இந்த தீர்மானத்தை கொண்டு வந்தால் இந்தியாவின் ஐநா பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடு என்ற கனவு அடிபட்டு விடும்.
இப்போது இந்திய வெளியுறவு அமைச்சகம் ஐரோப்பிய யூனியன் நாடுகளை தாஜா பண்ணும் நகர்வில் ஈடுபட்டுள்ளது . இந்த நகர்வு சாத்தியப்படவில்லை என்றால் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 26 நாடுகளையும் சமாளிக்கும் நகர்வில் ஈடுபடுவார்.
இந்தியா கொண்டு வந்துள்ள CAA வை கண்டித்து ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றினால் அடுத்த கட்டமாக ஐநா வரை அது எதிரொலிக்கும் .

இந்தியாவின் இந்த சட்டத்தை முதல் முதலாக கண்டித்து எதிர்த்தவர் மலேசிய பிரதமர் மகாதிர் முஹம்மத் மற்றும் பல அரபு நாடுகளும் கண்டித்து எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மலேசியா தெரிவித்துள்ள கண்டனத்துக்கு ஆட்சேபம் தெரிவித்துள்ள இந்தியா மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்து வந்த பாம் ஒயிலை இந்தோனேசியாவில் இருந்து 12 வீதம் விலை அதிகரிப்புக்கு இந்தியா இறக்குமதி செய்கின்றதது. அதாவது மலேசியா விலையில் பார்க்க 12 வீதம் விலை அதிகரிப்புக்கு.

எவ்வளவு அறிவுள்ள நாடு. ஆக அமித்சா கொண்டு வந்துள்ள மனிதாபிமானமற்ற இந்த சட்டத்தை கைவிடும் நோக்கத்தில் மோடி அரசு உள்ளது.
இந்தியாவுக்கு எதிராக வருகிறது ஐரோப்பிய யூனியனின் தீர்மானம் ! - Reviewed by Author on February 05, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.