அண்மைய செய்திகள்

recent
-

மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் யூபிலி விளையாட்டு விழா-படங்கள்

மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின்  ஜூபிலி 150 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விசேட மெய்வலுனர் விளையாட்டு விழாவானது நேற்றைய தினம் மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் ரெஜினோல்ட் தலைமையில் மதியம் 3 மணியளவில் பாடசாலை மைதானத்தில் ஆரம்பமாகி இடம் பெற்றது.
குறித்த விளையாட்டு நிகழ்விற்கு  பிரதம விருந்தினராக அம்பிட்டிய தேசிய குருமட விரிவுரையாளர் அருட்தந்தை அசிஸ் அவர்களும் மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.J.K.பிரட்லி  உட்பட பாடசலை மாணவர்கள் பழைய மாணவர்கள் ஆசிரியர்கள் முன்னால் அதிபர்கள் அருட்தந்தையர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மன்னார் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பாடசாலையான மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையானது ஆரம்பிக்கப்பட்டு 150 வருட ஜூலியை முன்னிட்டு  பல்வேறு விதமான சமய சமூக கலாச்சார நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்ட நிலையில் அதன் ஒருபகுதியாக விளையாட்டு வீரர்களை முன்னிறுத்தி விளையாட்டு விழாவானது  சிறப்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.






















மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் யூபிலி விளையாட்டு விழா-படங்கள் Reviewed by Author on February 08, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.