அண்மைய செய்திகள்

recent
-

அவுஸ்திரேலியாவில் கொரோனா தொற்று - தற்காலிக விசாவில் உள்ள 2000000 வெளிநாட்டினர் பாதிப்பு -


கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக, அவுஸ்திரேலியாவில் பல்வேறு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதனால், தற்காலிக விசாவில் உள்ள 20 லட்சம் வெளிநாட்டினர் நிர்கதியான சூழலில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலமுறை நுழைவதற்கான சுற்றுலா விசா, மற்றும் தற்காலிக பணி விசாவில் உள்ள வெளிநாட்டினர், இந்த சூழ்நிலையில் பாதிக்கப்படும் ஆபத்து இருப்பதாக அவுஸ்திரேலிய இடப்பெயர்வு கவுன்சில் கவலைத் தெரிவித்திருக்கிறது.
தொழில் முடக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள வேலைவாய்ப்பின்மையால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் அக்கவுன்சிலின் தலைமை நிர்வாகி கர்லா வில்ஷிர் தெரிவித்திருக்கிறார்.


கொரோனா தொற்று ஏற்படுத்தியுள்ள அச்சுறுத்தல், தற்காலிகமாக இடம்பெயர்ந்துள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து கவலைத் தெரிவித்துள்ளது லேபர் கட்சி.
தற்காலிக விசாவில் உள்ள பெருமளவிலான வெளிநாட்டினர் அவுஸ்திரேலியாவிலிருந்து வெளியேற முடியவில்லை என்றால், அவர்களுக்கு பொருளாதார மற்றும் மருத்துவ உதவி கிடைக்கவில்லை என்றால் அவர்கள் தொடர்ந்து வேலைச்செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும் என லேபர் கட்சி குறிப்பிட்டிருக்கின்றது.

இந்த நிலை, தொற்று பரவலுக்கு காரணமாகக்கூடிய ஆபத்துள்ளதாக லேபர் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் கொரோனா தொற்று - தற்காலிக விசாவில் உள்ள 2000000 வெளிநாட்டினர் பாதிப்பு - Reviewed by Author on March 26, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.