அண்மைய செய்திகள்

recent
-

பயம் வேண்டாம்! கொரானா வைரஸிமிடருந்து குழந்தைகளை பாதுகாக்க வழிமுறைகள்! -


உலக முழுவதும் கொரானா வைரஸ் மக்களிடம் பயத்தையும், ஒருவித அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

குழந்தைகளை இந்நோயிலிருந்து காப்பாற்ற வேண்டும். தெரியாமல் செய்யும் தவறை விட நாம் செய்வது தவறு என்று தெரியாமலே, நாம் செய்து கொண்டிருக்கும் தவறுகள்தான் அதிகம். அப்படிப்பட்ட தவறுகளை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டியது அவசியம்.

குழந்தைகள் டியுஷன் முதல் விளையாட்டு மைதானங்கள் வரை பலவகையான சூழல்களை எதிர்கொள்கின்றனர். சரியான முறையில் குழந்தைகளின் பாதுக்காப்பை நாம் மேற்கொள்ள வேண்டும்.
கொரோனா வைரஸ் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பெற்றோர்கள் எடுக்க வேண்டும் என்பது உண்மை தான். ஆனால், பதட்டமடையத் தேவையில்லை.
  • குழந்தைகளை தொடும்போதும், தூக்கும்போதும் பெற்றோர்கள் கைகளை நன்றாக கழுவிவிட்டு குழந்தைகளை தூக்கவேண்டும்.
  • குழந்தைகளுக்கு முதலில் கை கழுவும் போது கைகளின் முன்புறத்திலும், பின்புறத்திலும், விரல்களுக்கு இடையிலும், நகங்களுக்கு அடியிலும் தேய்த்துக் கழுவ சொல்லிக் கொடுக்க வேண்டும்.
  • சோப்பு, தண்ணீர் அல்லது ஆல்கஹால் சார்ந்த ஹேண்ட் சானிடைசர்கள் மூலமாக குறைந்தது 20 விநாடிகள் வரை கைகழுவுவது மிகவும் நல்லது. இப்படி செய்வதன் மூலம் தொற்றுநோய்கள் தருவதை தடுக்கலாம்.
  • மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு குழந்தைகளை கொண்டு செல்ல வேண்டாம்.
  • குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் கைகுலுக்குவது, கட்டிப்பிடிப்பது போன்ற அதிக உடல் தொடர்புடன் செயல்களை செய்தால் குழந்தைகளுக்கு எடுத்து சொல்லி புரியவையுங்கள்.
  • குழந்தைகளுக்கு இருமல், தும்மல் வரும் போது வாயை மூடுவதில்லை. கைக்குட்டையை பயன்படுத்துவதில்லை. கைகுட்டையை கொண்டு மூக்கையையும், வாயையும் மூடி இருமல், தும்மல் வரும்போது எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதை சொல்லிக்காட்டி, பயிற்சி கொடுங்கள்.
  • சுத்தமான இடங்களில் குழந்தைகளுக்கு உணவு கொடுங்கள். ஏனென்றால் குழந்தைகள் உணவு சாப்பிடும்போது தவறுதலாக தரையில் கையை வைத்து தேய்த்து விளையாடுவார்கள். தரையை எப்போதும் சுத்தம் செய்து கொண்டே இருங்கள்.
  • நன்கு சமைத்த சூடான உணவில் கவனம் செலுத்துங்கள்.
  • அளவான, தரமான உணவை மட்டுமே குழந்தைகளுக்கு கொடுங்கள். அளவுக்கு அதிகமான உணவை குழந்தைகளுக்கு அளிக்க வேண்டாம்.
  • இரண்டு வயது முதல் ஆறு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல், இருமல் ஆகிய நோய்கள் வரும். உடனே மருத்துவரை அணுகுங்கள்.
  • தினமும், அல்லது வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்களாவது கீரை கொடுப்பது நல்லது.
  • ஆப்பிள், வாழைப்பழம், கொய்யா, மாதுளை போன்ற பழங்களை கொடுக்கலாம். வைட்டமின் சி இருக்கும் பழங்கள் அதிகளவில் குழந்தைகளுக்குக் கொடுப்பது நல்லது.
  • பாதாம், பிஸ்தா, அக்ரூட் போன்ற நட்ஸ் மற்றும் உலர் திராட்சை, பேரீச்சை போன்ற உலர் பழங்களை குழந்தைகளுக்குத் தொடர்ந்து கொடுத்துவர குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
  • மீன் உணவுகளை குழந்தைகளுக்கு குழந்தைகளுக்கு வாரத்திற்கு 2 அல்லது 3 நாட்களுக்கு கொடுக்கலாம்.
  • புரோட்டீன் அதிகம் உள்ள மீனில் 'ஒமேகா 3' என்ற ஒரு வகை ஆசிட் உள்ளது. இது உடலில் எந்த நோயும் நெருங்காமல் இருக்க உதவுவதுடன், கண்பார்வை குறைபாட்டைத் தவிர்த்து மூளைவளர்ச்சிக்கு உதவும்.
  • கம்பு, சோளம், கோதுமை, ராகி, கேள்வரகு போன்ற தானியவகைகளை எல்லாம் கலந்து பொடிசெய்து, கஞ்சியாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
  • பொதுவாகவே குழந்தைகள் சீக்கிரமே நோய்த் தாக்குதலுக்குள்ளாவார்கள். எனவே, குழந்தைகளின் பாதுகாப்பு மிக மிக அவசியம். சத்தான உணவுகளை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அவர்களுக்கு கிடைக்கும்.

பயம் வேண்டாம்! கொரானா வைரஸிமிடருந்து குழந்தைகளை பாதுகாக்க வழிமுறைகள்! - Reviewed by Author on March 24, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.