அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை-'கொரோனா' வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாப்பதற்கான முன்னேற்பாட்டு கலந்துரையாடல்.

கொரோனா வைரஸ் தொற்று தாக்கத்திலிருந்து பாதுகாப்பதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை 17-03-2020 காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்ட  செயலகத்தில் அரசாங்க அதிபர் சி.ஏ. மோகன்றாஸ் தலைமையில் இடம் பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் பிரதேசச் செயலாளர்கள்,திணைக்கள அதிகாரிகள் உற்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த கலந்துரையாடலின் போது பர்வேறு  தீர்மானங்கள் முன் வைக்கப்பட்டது.

குறிப்பாக பிரதேச மட்டத்திலும், கிராம மட்டத்திலும் கொரோனா வைரஸ் நிலையங்களை   அமைத்தல்.

மார்ச் மதத்திலிருந்து வெளிநாட்டில் இருந்து வந்தவர்களின் வருகை, வெளி மாவட்டகங்களில் இருந்து வந்தவர்களின் வருகை, உள் மாவட்டகளிளிருந்து வெளி மாவட்டங்களுக்கு சென்றவர்கள் போன்றர்களின்  தருவுகளை சேகரித்தல்.

யாரும் காய்ச்சல் தொடர்பாக வெளிப்படுத்தாமல் மறைவாக இருக்கும் சந்தர்ப்பங்களில் காவல்துறை ஊடக  உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

வைத்தியரின் பங்களிப்புடன் பொது மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்சிகளை நடாத்துதல்.

உத்தியோகத்தர்கள் தங்களை தாமே பாதுகாத்து கொள்வதுடன், அவசர தேவைகளின் போது சுழற்சி முறையில் சமூகம் தருதல் வேண்டும் எனவும், பொது மக்களுக்கான சேவைகள் மட்டுப்படுத்துதல்.

சேவை பெற வரும் பொது மக்களுக்கென அவசர தேவையின் போது மாத்திரம் மாவட்ட செயலகம் மற்றும் தனிப்பட்ட கிளைகள் மற்றும் பிரதேச செயலகங்களினது மின்னஞ்சல் முகவரியினை அனைவருக்கும் தெரியப்படுத்துவதுடன், தமக்கு கிடைக்கப் பெறும் மின்னஞ்சல்களிற்கு உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.

மேலும் அத்தியவசியப் பொருட்களின் சட்டத்துக்கு முரணான  விலை அதிகரிப்பவர்களுக்கு  எதிராக கடும் நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாகவும் பொருட்களின் தட்டுபாடுகளின் தீர்வு சம்பந்தமாகவும் விரிவாக ஆராயப்பட்டது.

உத்தியோகத்தர்கள் தாம் வாழும் பிரதேசங்களில் உள்ள கோவில்களில் திருவிழாக்களை குறிப்பிட்ட காலம் வரையில் ஒத்திவைக்கும் படி அறிவுறுத்து மாறு கேட்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகள் சம்பந்தமான  அறிக்கையினை ஒவ்வொரு நாளும் பிற்பகல் 3 மணியளவில் மன்னார் மாவட்ட செயலகத்துக்கு சமர்பிக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ. மோகன்றாஸ் பிரதேச செயலாளர்களுக்கு கோரிக்கை விடுத்தார்.

இதே வேளை முன்னேற்பாடு தொடர்பாக இடம் பெற்ற குறித்த விசேட கலந்துரையாடலின் போது மன்னார் மாட்ட பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




மன்னார் ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை-'கொரோனா' வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாப்பதற்கான முன்னேற்பாட்டு கலந்துரையாடல். Reviewed by Author on March 18, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.