அண்மைய செய்திகள்

recent
-

உலகமே கலங்கி நிற்கும் கொரோனாவை பரப்பியது பெண்மணிதானாம்!


சீனா வுஹான் நகரத்தில் மாமிச உணவு சந்தையில் இறால் விற்கும் பெண்மணி ஒருவரே உலகின் முதல் கொரோனா நோயாளி என கண்டறியப்பட்டுள்ளது.

வெய் குவாய்ஜியான் (Wei Guixian) என்ற 57 வயதுடைய பெண்மணியே கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இலக்கான முதல் நபர் என கூறப்படுகின்றது.

வுஹான் நகர சந்தையில் இறால் விற்கும் இவர், கடந்த வருடம் டிசம்பர் மாதம் 10ம் திகதி காய்ச்சலால் கடுமையாக அவதிப்பட்டுள்ளார். ஆனால் பொதுவாக தனக்கு அடிக்கடி வரும் குளிர் காய்ச்சல் என்றே இதையும் கருதியுள்ளார். இதனையடுத்து உள்ளூரிலுள்ள வைத்தியசாலைக்கு சென்று வைத்தியரிடம் இருமல் மற்றும் காய்ச்சலுக்காக ஊசி போட்டு, மருந்தும் எடுத்துக் கொண்ட பின்னர் தனது பகுதிக்கு சென்று நோயையும் பரப்பி , தொடர்ந்து இறால் விற்பனையிலும் ஈடுபட்டார்.

இவரே வுஹான் நகரம் முழுவதும் பின்னர் உலகம் முழுவதும் பல்லாயிரம் பேர் உயிரிழப்பதற்க்கு காரணம் என கூறப்படுகிறது.

நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

அந்த வைரஸ் காய்ச்சலுக்கு பின்னர் தமக்கு கடுமையான உடல் சோர்வு இருந்ததாகவும், ஆனால் கடந்த வருடம் ஏற்பட்ட காய்ச்சலின் போது இருந்த அளவைவிட கடுமையாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு குளிர்காலத்திலும், நான் எப்போதும் காய்ச்சலால் பாதிக்கப்படுவதால் இதுவும் சாதாரண காய்ச்சல் என கருதியதாக தெரிவித்துள்ளார்.

வுஹான் உள்ளூர் வைத்தியசாலையிலிருந்து மருந்துகளை பெற்றும் காய்ச்சல் குணமாகவில்லை. தொடர்ந்து டிசம்பர் 16ம் திகதி வுஹான் நகர வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

அப்போது இவரை பரிசோதித்த அங்குள்ள வைத்தியர், இவருக்கு ஏற்பட்டுள்ள நோய் மிகவும் ஆபத்தானது எனவும், வுஹான் மாமிச சந்தையில் இருந்து இதே அறிகுறிகளுடன் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

இதனையடுத்து டிசம்பர் மாத இறுதியில் வுஹான் நகர வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

ஜனவரியில் பூரண குணமடைந்த வெய், தாம் பாதிக்கப்பட்டது கொரோனா வைரஸ் எனவும், வுஹான் சந்தையில் அமைந்துள்ள பொது கழிவறையிலிருந்து பரவியிருக்கலாம் எனவும் அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார.


இதேவேளை இவருடன் சேர்ந்து வியாபாரத்தில் ஈடுபட்டவர்களும் அவரது உறவினர்களும் இதே வகையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.



சீனா அரசாங்கம் ஜனவரி மாதம் ஆரம்பம் வரை இத் தொற்று நோய் பரவியதை ஏற்றுக்கொள்ளவில்லை. வெய் மட்டுமின்றி அவரது மகள் உள்ளிட்ட குடும்பத்தவர்களும் இந்த விசித்திரமான காய்ச்சலுக்கு இலக்கானார்கள்.

சீன அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டிருந்தால், இந்த காய்ச்சல் சீனாவுடன் கட்டுக்குள் வந்திருக்கும், உலகளவில் இவ்வாறு பரவ வாய்ப்பில்லை.

தொடர்ந்து வுஹான் நகராட்சி சுகாதார ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட முதல் 27 நோயாளிகளில் 24 பேர் வுஹான் நகர சந்தையில் தொடர்புடையவர்கள் என சுட்டிக்காட்டியது. ஆனால் சீன தனியார் மருத்துவ ஆய்வறிக்கையொன்று வெளியிட்ட தகவலில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இலக்கான நபர் தொடர்பில் டிசம்பர் மாதம் 1ம் திகதியே அடையாளம் காணப்பட்டதாகவும், ஆனால் அவருக்கும் வுஹான் நகர சந்தையுடன் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை என்ற ஒரு வாதத்தையும் முன்வைத்துள்ளது.

இவ்வாறான நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 1வது நோயாளியை அடையாளம் காண முடிந்தால் அது கொரானோ வைரஸின் ஆரம்பத்தை அறிவதற்கு உதவும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

உலகமே கலங்கி நிற்கும் கொரோனாவை பரப்பியது பெண்மணிதானாம்! Reviewed by Author on March 29, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.