அண்மைய செய்திகள்

recent
-

இனி கொரோனா அச்சம் வேண்டாம்..நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த உணவுகள் சாப்பிட்டாலே போதும்!


பொதுவாக ஒருவர் அடிக்கடி சளி, ஜலதோஷம் பாதிக்கப்படுவதற்கு காரணம் உடலில் நோய் எதிர்ப்பு தன்மை குறைவாக இருப்பதே ஆகும்.
அதுமட்டுமின்றி இன்றி உலகையே அச்சுறுத்தும் பல வைரஸ்கள் உருவெடுத்து உயிரை பறிக்கும் அளவிற்கு மாறிவிட்டது. இதில் கொரானாவும் ஒன்றாகும்.
அந்தவகையில் இதுபோன்ற பிரச்சனையில் இருந்து விடுபட சில உணவுகளை எடுத்துகொண்டாலே போதும். தற்போது அந்த உணவுகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
  • ஆரஞ்சு , எலுமிச்சை, சாத்துக்குடி, திராட்சை போன்ற பழங்களில் ஏதேனும் ஒன்றை தினமும் சாப்பிடுவது அவசியம். இவற்றில் உள்ள வைட்டமின் C இரத்தச் செல்களில் உள்ள வெள்ளை அணுக்களை அதிகரிக்கும்.
  • ப்ரொக்கோலியில் வைட்டமின் A, C மற்றும் E நிறைந்தது. அதோடு மினரல் சத்துக்களும் நிறைவாக உள்ளது. எனவே வாரத்தில் ஒருமுறையேனும் சாப்பிடுவது அவசியம்.
  • பூண்டில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதில் பூண்டு முக்கியமானது. நம் பாரம்பரிய மூலிகை வைத்தியங்கள் அனைத்திலும் பூண்டும் இடம் பெறும். இது நோய்த்தொற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அழிக்கும் ஆற்றல் கொண்டது. இரத்த அழுத்தம் கொண்டவர்களுக்கு சிறந்த மருந்து.
  • இஞ்சி தொண்டை வலி, சளி, இருமல் , காய்ச்சல் என எந்த நோயாக இருந்தாலும் அதற்கு இஞ்சி சிறந்த மருந்து. காரணம் இது தொற்றுக்களை வெகுவாக அழிப்பது மட்டுமன்றி நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
  • கீரைகளில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட் மற்றும் பீரா கரோடின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலிமையாக்குகின்றன. நன்கு வேக வைக்காமல் பாதியளவு வேகவைத்துச் சாப்பிட்டால் ஊட்டச்சத்து முழுமையாகக் கிடைக்கும்.
  • தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள், வைட்டமின் D உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டி வேகமாக செயல்பட உதவும். இதை சாதாரணமாக சாப்பிட பிடிக்கவில்லை எனில் செர்ரி பழம், வெள்ளரி என பழங்கள் கலந்தும் சாப்பிடலாம்.
  • பாதாமில் வைட்டமின் C-க்கு அடுத்தபடியாக வைட்டமின் E தான் உடலுக்கு முக்கிய ஊட்டச்சத்து. இது மர உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துகளை உறிஞ்சி உடலுக்கு அளிக்கும். இந்த வைட்டமின் E பாதாமில் அதிகம் உள்ளதால் தினமும் 5 சாப்பிடலாம்.
  • மஞ்சள் நோய்களை தாக்கி அழிப்பதில் வல்லதாகச் செயல்படும் மஞ்சள் உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்வது அவசியம்.
  • கிரீன் டீ உடலுக்கு நல்லது. இது நோய் தொற்றுகளிலிருந்து பாதுகாக்கும்.
  • பப்பாளியும் வைட்டமின் C சத்துக்கு சிறந்த பழம். இது செரிமானத்தை எளிதாகத் தூண்டி தேவையான சத்துக்களை அளிக்கவல்லது. பொட்டாசியம், வைட்டமின் B போன்ற சத்துக்களும் இருப்பது கூடுதல் நன்மையளிக்கும்.
  • கிவி பழத்தில் உடலுக்குத் தேவையான எண்ணற்ற சத்துக்களை உள்ளடக்கியது . போலேட், பொட்டாசியம், வைட்டமின் K, C என நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மிக முக்கிய சத்துக்கள் கிவி பழத்தில் உள்ளன.
  • சிக்கன் காய்ச்சல், சளி, இறுமல், தொண்டை வலி என உடல்நலக்குறைவின் போது சிக்கன் சூப் குடித்தால் உடலுக்கு சிறந்த ரிலீஃபாக இருக்கும். ரத்தத்தில் சிவப்பணுக்களுக்கு புத்துயிர் அளித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
  • சூரிய காந்தி விதையில் வைட்டமின் B-6 , மெக்னீசியம், பாஸ்பரஸ் , வைட்டமின் E என ஆற்றல் மிகுந்த ஆண்டி ஆக்ஸிடண்ட் அதிகமாக உள்ளது.
  • மீன் , நண்டு, இறால் போன்ற கடல் சார் உணவுகளிலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது.

இனி கொரோனா அச்சம் வேண்டாம்..நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த உணவுகள் சாப்பிட்டாலே போதும்! Reviewed by Author on March 09, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.