அண்மைய செய்திகள்

recent
-

கொரோனா நெருக்கடி நிலையால்! பிரித்தானியர்கள் ஒவ்வொருவருக்கும் வாரந்தோறும் நிதி வழங்க பிரதமர் முடிவு -


கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுத்திய குழப்பத்தால் பல மில்லியன் பிரித்தானியர்கள் வேலையிழக்கும் அபாயம் இருப்பதையடுத்து, குடிமக்களுக்கு உதவ அரசு முன்வந்துள்ளது.
அரசு முன்வைத்துள்ள திட்டம் ஒன்றின்படி, ஒவ்வொரு பிரித்தானியருக்கும் வாரந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், கொரோனா பிரச்சினையால் வேலையில்லாமல், வருவாயின்றி, மக்கள் ஏழ்மை நிலைக்கு சென்று விடாமல் தடுப்பதற்காக, நேற்று இரவு அடிப்படை வருவாய் (universal basic income) ஒன்றை நாட்டு மக்கள் அனைவருக்கும் வழங்கும் ஒரு திட்டத்தை முன்வைத்தார்.

இந்த அடிப்படை வருவாய் என்பது வாரம் ஒன்றிற்கு, ஒருவருக்கு, 48 பவுண்டுகள் முதல் 1,000 பவுண்டுகள் வரை இருக்கலாம்.

ஆனால், அரசுக்கு இது பெரும் சுமையாக அமையும் என்பதோடு, ஏற்கனவே வசதியாக இருப்பவர்களுக்கும் பெரும் தொகையை வழங்கும் சூழல் ஏற்படலாம்.
இதற்கிடையில், 56,000க்கும் அதிகமான பிரித்தானியர்கள், தங்களுக்கு, தங்க இடமும் உணவு பாதுகாப்பும் வழங்கக் கோரி மனு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார்கள்.
இதேபோல், அமெரிக்க அதிபர் ட்ரம்பும், அமெரிக்கர்களுக்கு ஆளுக்கு 1,000 டொலர்கள் நிதி வழங்கும் திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா நெருக்கடி நிலையால்! பிரித்தானியர்கள் ஒவ்வொருவருக்கும் வாரந்தோறும் நிதி வழங்க பிரதமர் முடிவு - Reviewed by Author on March 20, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.