அண்மைய செய்திகள்

recent
-

மனித உரிமை ஆணைக்குழுவினால் தீர்க்க முடியாமல் போன வெள்ளங்குளம் பொது மக்களின் காணி பிணக்கினை ஆளுனரின் காணி பிணக்கு கையாளும் விசாரணைக்குழுவிற்கு அனுப்பிவைப்பு- (VIDEO,PHOTOS)

மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட தேவன் பிட்டி பகுதியில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்களுக்கு விவசாய நடவடிக்கைகளை மேற் கொள்ளுவதற்காக வழங்கப்பட்ட காணியானது இதுவரை பிரதேச செயலகத்தினால் வழங்கப்படவில்லை என்ற அடிப்படையிலும் 17.09.2018 அன்று மன்னார் மனித உரிமை ஆணைகுழுவின் உப காரியாலயத்தில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் மெசிடோ ஊடாக தேவன் பிட்டி விவசாய அமைப்பினரால் தேவன் பிட்டி விவசாயிகளின் வயல் காணி தொடர்பாக முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது.

குறித்த முறைப்பாட்டின் விசாரணையானது கடந்த வருடம் ஜனவரி மாதம் 4 ஆம் திகதி (04-01-2019) அன்று மன்னார் மனித உரிமை ஆணைக்குழுவின் உப காரியாலயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த விசாரணையின் போது காணி உரித்து நிர்ணய திணைக்களமானது தங்களுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்குமாறும் அவ் மூன்று மாத காலப்பகுதிக்குள் அக்காணி யாருடையது? அரச காணியா அல்லது இல்லை தனியார் காணியா என அடையாளப்படுத்தி தருவதாக தெரிவித்திருந்தனர்.

 அதற்கமைவாக மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டு இன்று ஒருவருடம் கடந்த நிலையில்  வெள்ளிக்கிழமை 13-03-2020  மன்னார் மனித உரிமை ஆணைக்குழு உப காரியாலயத்தின் ஊடாக குறித்த முறைப்பாடை செய்த மக்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

குறித்த கடிதத்தில் தேவன் பிட்டி விவசாய அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பாக இறுதி தீர்வை பெறும் பொருட்டு ஆணைக்குழுவானது கலந்துரையாடல் ஒன்றுக்கு செல்ல தீர்மானித்துள்ளதாகவும் எனவே அவ் கலந்துரையாடலில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அக்கடித்த்கத்துக்கு ஏற்ப நேற்று வெள்ளிக்கிழமை மாலை குறித்த விசாரணைக்காக தேவன் பிட்டி விவசாய அமைப்பின் தலைவர் மற்றும் செயலாளர் உள்ளிட்ட குழுவினர் மன்னார் மனித உரிமை ஆணைக்குழுவில் ஆஜர் ஆகியிருந்தனர்

ஆனால் நேற்றைய தினமும் குறித்த காணி பிரச்சினை தொடர்பாக தீர்வு ஏதும் வழங்காமல் ஒரு வருடத்துக்கு மேலான காலப்பகுதி வழங்கப்பட்டும் இவ் பிணக்குக்கு உரிய காணி பற்றிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அதன் இறுதி முடிவு காணி உரித்து நிர்ணய திணைக்களத்தினால் இதுவரை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படாததினால் பாதிக்கப்பட்டு நியாயத்தை எதிர்பார்க்கும் மக்களுக்கு தீர்வு வழங்குவதில் தாமதமான நிலை காணப்பட்டுள்ளது.

எனவே இக்காணி பிணக்கினை வட மாகாண ஆளூனர் அவர்களின் தலைமையின் கீழ் நிறுவப்பட்டுள்ள காணி பிணக்கினை கையாளும் விசாரணைகுழுவிற்கு எதிர்வரும் நாட்களின் கையளிக்குமாறு தெரிவிக்கப்பட்டு கடிதம் கோரிக்கை கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த காணி உரித்து திணைக்களம் மூன்று மாத காலம் கோரி ஒரு வருடம் ஆகியும் காணி தொடர்பான இறுதி அறிக்கை வழங்காமல் உள்ளதால் காணி உரித்து திணைக்களம் செயற்படவில்லையா? அல்லது செயற்பாடு அற்ற அதிகாரிகளாக உள்ளனரா? அல்லது மனித உரிமை ஆணைக்குழுவை மதிக்காமல் செயற்படுகின்றதா? என சந்தேகம் எழுவதாகவும்  மனித உரிமை ஆணைக்குழுவினாலே பாதிக்கப்பட்ட மக்களூக்கு தீர்வினை பெற்று தர முடியாத பட்சத்தில் யார் தான் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்போகின்றனர் எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.

  எமக்கு வழங்கப்பட வேண்டிய காணி தமக்கு வழங்குமாறு வட மாகாண காணி ஆணையாளரால் வழங்கப்பட்ட காணி அக்காணியை தமக்கு பெற்று தருவதற்கான முழுமையான நடவடிக்கையை மனித உரிமை ஆணைக்குழுவினரும் வடமாகாண காணி பிணக்கு  தொடர்பான விசாரணை குழு மேற்கொண்டு தர வேண்டும் எனவும் பாதீக்கப்பட்டவர்கள் கோரிக்கை  விடுக்கின்றனர்.





மனித உரிமை ஆணைக்குழுவினால் தீர்க்க முடியாமல் போன வெள்ளங்குளம் பொது மக்களின் காணி பிணக்கினை ஆளுனரின் காணி பிணக்கு கையாளும் விசாரணைக்குழுவிற்கு அனுப்பிவைப்பு- (VIDEO,PHOTOS) Reviewed by Author on March 15, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.