அண்மைய செய்திகள்

recent
-

வெள்ளை அணு புற்று நோய் என்றால்? இதற்கு என்ன சிகிச்சை எடுக்கலாம்? -


வெள்ளை அணு புற்று நோய் (லுகீமியா) என்பது ஒரு உயிர்கொல்லி நோயாகும். வளர்ச்சியற்ற வெள்ளையணுக்களின் அளவுக்கு அதிகமான பெருக்கமே இந்நோயின் தன்மை.
அந்தவகையில் வெள்ளை இரத்த அணுக்கள் என்றால் என்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
வெள்ளை இரத்த அணுக்கள் என்றால்
வெள்ளை இரத்த அணுக்கள், அல்லது லுகோசைட்டுகள், தொற்றுநோய்களுக்கு எதிராக செயல்படுகின்றன மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை.
இரத்த சிவப்பணுக்கள் இரத்தத்தின் வழியாகவும், எலும்புக்குள்ளும் ஆக்ஸிஜனின் சரியான போக்குவரத்தை உறுதிசெய்து, மற்ற வகை இரத்த அணுக்களை உற்பத்தி செய்வதற்கு பொறுப்பாகும்.
இதில் லிம்போசைட்ஸாக உருவாகும் சாதாரன செல்கள் புற்று தன்மையாக மாறி எலும்பு மஜ்ஜைக்குள் இருக்கும் சாதாரணமான செல்களுக்கு மாற்றாக அமைகிறது.
எந்த வயதினரை தாக்கும்?
தீவிர லிம்போஸைடிக் லுகீமியா எல்லா வயதினருக்கும் ஏற்பட்டாலும், 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் 25% இதுவாகதான் உள்ளது.
இந்த நோய் அதிகபட்சமாக 2 முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பாதிக்கின்றது.
பெரியவர்களில் இது 45 வயதிற்கும் மேற்பட்டவர்களில் அதிகமாக காணப்படுகின்றது.
நான்கு வகைகள்
லுகேமியாவின் நான்கு முக்கிய வகைகள் உள்ளன:
  • கடுமையான Myelogenous (அல்லது myeloid) லுகேமியா (ஏஎம்எல்)
  • கடுமையான லிம்போசைடிக் (அல்லது லிம்போபிளாஸ்டிக்) லுகேமியா (ALL)
  • நாள்பட்ட Myelogenous (அல்லது myeloid) லுகேமியா (CML)
  • நாள்பட்ட லிம்போசைடிக் (அல்லது லிம்போபிளாஸ்டிக்) லுகேமியா (CLL)
இதனால் ஏற்படும் ஆபத்து என்ன?
  • மிகவும் வளர்ச்சியடையாத லுகீமியா செல்கள் எலும்பு மஜ்ஜையில் ஒன்றுகூடி, சாதரணமான இரத்த செல்களை உருவாக்கும் செல்களை அழித்து மாற்றுகிறது.
  • லுகீமியாசெல்கள் இரத்த ஓட்டம் மூலமாக கல்லீரல், மண்ணீரல், லிம்ப் நோட்ஸ், மூளை, மற்றும் ஆண் விதை பைகளுக்கும் பரவி, அங்கே வளர்ந்து விருத்தி அடைகின்றது.
  • மூளை மற்றும் முதுகு தண்டு நரம்புகளின் மேல் பரப்பாக இருக்கும் திசுக்களின் படிவங்களை அரித்து வீக்கத்தை உண்டாக்கும் (மெனின்ஜைடிஸ்).
  • இரத்தசோகை, கல்லீரல் மற்றும் சிறுநீரகம் வேலை செய்யாமல் போகலாம். மேலும் மற்ற உறுப்புகளும் பழுதடையலாம்.
அறிகுறிகள்
தேவையான அளவு சாதாரண இரத்த செல்களை உருவாக்க இயலாத நிலையே ஆரம்ப அறிகுறி ஆகும்.
சாதாரன வெள்ளை அணுக்கள் காய்ச்சல் மற்றும அதிக வியர்வை மூலமாக சோர்வினை உண்டாக்கும்.
நோய்கண்டறியும் முறை
  • குறைவான பிலேட்லெட்களால், நீலம் பாய்தல் மற்றும் இரத்தக்கசிவு, சிலசமயம் மூக்கில் இரத்தம் வடிவது அல்லது ஈறுகளில் இரத்தம் கசிவு ஏற்படுகின்றது.
  • மூளையில் லுகீமியா செல்கள் இருந்தால் தலைவலி, வாந்தி மற்றும் கடுகடுப்பு ஏற்படலாம்.
  • எலும்பு மஜ்ஜையில் லுகீமியா செல்கள் இருந்தால் எலும்பு மற்றும் மூட்டுகளில் வலி ஏற்படலாம்.
  • லுகீமியா செல்கள் கல்லீரல் மற்றும் மண்ணீரலை வீக்கமடைய செய்வதால் வயிற்று பகுதி நிரம்பி இருப்பது போன்ற உணர்வு அல்லது சிலசமயம் வலி ஏற்படலாம்.
சிகிச்சை என்ன?
கீமோதெராபி
லுகீமியா செல்களை அழித்து, முழுமையான கட்டுப்பாடு அடைவதுதான் ஆரம்ப சிகிச்சியின் நோக்கமாகும். இதனால் எலும்பு மஜ்ஜையில் சாதாரணமான செல்கள் மீண்டும் வளர முடியும்.
எலும்பு மஜ்ஜை எவ்வளவு விரைவாக குணம் அடைகிறதோ அதைப் பொருத்து, நோயாளிகள் சில நாள்களோ அல்லது வாரங்களோ மருத்துவமனையில் தங்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
லுகீமியா மூளைக்கு பரவியதாக சிறிய தடையம் இருந்தாலும் இதேபோன்ற சிகிச்சை தற்பாதுகாப்பு நடவடிக்கையாக தரப்படுகிறது, ஏனெனில் மெனின்ஜஸ்ஸிற்கு இது பரவுவதற்கு அதிகமான வாய்ப்பு உள்ளது.
தொகுப்பு கீமோதெராபி
மீதம் உள்ள லுகீமியா அணுக்களை அழிக்க தரப்படுகிறது. கூடுதல் கீமோதெராபி மருந்துகள் அல்லது இண்டக்சன் கட்டத்தில் உபயோகப்படுத்தப்பட்ட அதே மருந்துகளை மீண்டும் சில தடவைகள் பல வாரங்களாக பயன்படுத்தலாம்.
பராமரிப்பு கீமோதெராபி
குறைவான மருந்துகள், சில சமயம் குறைந்த அளவுகள் கொண்ட, நீடித்த சிகிச்சையாக இந்த சிகிச்சையை 2 முதல் 3 ஆண்டுகளுக்கு தொடந்து அளிக்கலாம்.
ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை
அணுக்களில் உள்ள குறிப்பிட்ட மரபணு மாற்றங்களால், நோய் மீண்டும் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ள சில நோயாளிகளுக்கு, முதல் சிகிச்சைக்குப்பிறகு ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை அதிகமாக பரிந்துரைக்கப்படுகிறது.
ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை, 65 வயதிற்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு சில நேரங்களில்தான் செய்யபடுகிறது.
ஏனெனில் சிகிச்சை வெற்றி அடைவதற்கன வாய்பு மிகவும் குறைவு. மேலும், பக்க விளைவுகள் உயிருக்கு ஆபத்தானதாக முடியும் வாய்ப்புகள் மிகவும் அதிகம்.
திசு ஒற்றுமையுடைய ஒருவரிடமிருந்து ஸ்டெம் செல்கள் கிடைத்தால் தான் மாற்று சிகிச்சை செய்ய முடியும்.

வெள்ளை அணு புற்று நோய் என்றால்? இதற்கு என்ன சிகிச்சை எடுக்கலாம்? - Reviewed by Author on March 17, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.