அண்மைய செய்திகள்

recent
-

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் தீவிர விசாரணை நடத்தும் அரசாங்கம்! -


வெளிநாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று நிலைமையினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு பாதுகாப்பு மற்றும் வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு திருப்பி அழைக்குமாறு பல நாடுகளிலுள்ள இலங்கையர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தமை தொடர்பாக வெளியுறவு அமைச்சிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சின் அதிகாரி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன் கீழ் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள இலங்கை தூதரகங்கள் அல்லது உயர் ஸ்தானிகராலயம் மூலம் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் பற்றிய தகவல்கள் பெறப்பட்டுள்ளன என அவர் கூறியுள்ளார்.
சமூக ஊடகங்கள் அல்லது பிற வழிகளால் பெறப்பட்ட தகவல்களுக்கமைய இலங்கையர்களைப் பற்றிய தொடர்ந்து தேடுவதாக அவர் கூறியுள்ளார்.
பல்வேறு நோக்கங்களுடன் வெளிநாடுகளில் வசிக்கும் அனைத்து இலங்கையர்கள் தொடர்பில் விசாரிக்கப்படுவதாக வெளியுறவு அமைச்சக செயலாளர் தெரிவித்துள்ளார்.

அனைத்து வெளிநாட்டு வாழ் இலங்கையர்களும் உடனடியாக இலங்கை தூதரகம் அல்லது தங்கள் நாட்டிலுள்ள உயர் ஸ்தானிகராலயத்திற்கு தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
இதற்கான தகவல்களை வெளியுறவு அமைச்சகம், தூதரகம் அல்லது உயர் ஸ்தானிகராலயத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் மூலம் பெறலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் தீவிர விசாரணை நடத்தும் அரசாங்கம்! - Reviewed by Author on April 13, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.