அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் வளர்ப்புத் தேனீக்கள் அனைத்தும் கூட்டில் இருந்து கலைந்து சென்று விட்டது-காரணம் தெரியாமல் கவலைப்படும் தேனீ வளர்ப்பாளர்.

நானாட்டான் பிரதேசத்திற்கு உற்பட்ட எருவிட்டான் கிராமத்தில்  நீண்ட காலமாக வீட்டுத் தோட்டங்கள்  மூலமாகவும் தேனீ வளர்பின் மூலமாகவும்  வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வந்தவர்கள் இரண்டு மாதங்களாக தேனிக்களை வளர்த்து வந்த நிலையில் அதில் அதிகளவான தேனீக்கள் பறந்து சென்று விட்டதாக பாதிக்கப்பட்ட தேனீ வளர்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இன்னும் ஒரு மாதத்தில்  தேன் சேகரிக்க காத்திருக்கும் நிலையில் இருந்த தேனீக்களே  கலைந்து சென்றுள்ளது.

  இதற்கு முன் இவ்வாறான சம்பவங்கள் நிகழ்ந்தது இல்லை எனவும் இது வரை இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என்றும் பாதிக்கப்பட்ட தேனீ வளர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடம் மன்னார் விவசாய திணைக்களத்தினால்  சிறந்த வீட்டுத்தோட்ட செய்கையாளருக்கான விருதினை   மன்னார் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளரிடம் இருந்து பெற்றிருந்தவரும் மேற்படி பிரச்சினையால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்துள்ளமை குறிப்பிடதக்கது.



மன்னாரில் வளர்ப்புத் தேனீக்கள் அனைத்தும் கூட்டில் இருந்து கலைந்து சென்று விட்டது-காரணம் தெரியாமல் கவலைப்படும் தேனீ வளர்ப்பாளர். Reviewed by Author on April 22, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.