அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 'சிமைல் லங்கா அறக்கட்டளை' அத்தியாவசிய உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு.

நாட்டை அச்சத்திற்கு உள்ளாகியுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக பாதீக்கப்பட்ட மக்களுக்கு "சிமைல் லங்கா அறக்கட்டளையின்" மனித நேய பணிகள் முதற் கட்டமாக தொடர்ச்சியாக வவுனியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சிமைல் லங்கா அறக்கட்டளையின் ஸ்தாபகர் மயூரன் சௌந்தராஜ் தலைமையில் தொடர்ச்சியாக வவுனியா மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

புலம்பெயர் தமிழர்களின் நிதிப் பங்களிப்பிலும் காவல்துறை ஊரடங்குச் சட்டத்தினால் பாதிக்கப்பட்ட  உறவுகளுக்கான உலர் உணவு பொருட்கள் வவுனியா மாவட்டத்தில் ஊரடங்கு அறிவித்த நாள் முதல் இன்று வரை 2500 குடும்பங்களுக்கு மேல் தனது அறக்கட்டளை மூலம் மனித நேய பணிகளினூடாக வழங்கி வருகின்றார்.

 சிமைல் லங்கா அறக்கட்டளையின் ஸ்தாபகர் மயூரன் சௌந்தராஜ் அவர்களுடன் மனித நேய பணிகளில்   வவுனியா மாவட்ட உதை பந்தாட்ட சங்க தலைவர் நாகராஜன் மற்றும் அறக்கட்டளை செயலாளர் கபிலன் உள்ளிட்ட குழுவினர் இரவு பகல் பாராது தொடர்ந்தும் மக்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







வவுனியாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 'சிமைல் லங்கா அறக்கட்டளை' அத்தியாவசிய உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு. Reviewed by Author on April 22, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.