அண்மைய செய்திகள்

recent
-

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 477 ஆக அதிகரிப்பு -


புதிய இணைப்பு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 06 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இன்று (26) பிற்பகல் 6.30 மணியளவில் தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 471 இலிருந்து 477 ஆக அதிகரித்துள்ளது.
-------
அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி இலங்கையில் கொரோன தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 471 எனத் தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் இதுவரையில் 10 கடற்படை வீரர்கள் உள்ளடங்கலாக 11பேர் கொரோனா சோதனைக்குள்ளாகி உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவை வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 467 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் 185 பேர் கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தை மற்றும் வெலிசறை கடற்படை முகாம் ஆகிய பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டவர்களாகும். இது மொத்த தொற்றுறுதியானவர்களில் 40 சதவீதத்தினை கொண்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வாழைத்தோட்டம் - பண்டாரநாயக்க மாவத்தையில் 90 பேரும், வெலிசறை கடற்படை முகாமில் 68 சிப்பாய்களுக்கும், விடுமுறையில் சென்றிருந்த 27 சிப்பாய்களுக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினத்தில் மாத்திரம் 40 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் வெலிசறை கடற்படை முகாமில் தங்கியுள்ள 10 கடற்படை சிப்பாய்களுக்கும், விடுமுறை வழங்கப்பட்டிருந்த இன்னும் 10 கடற்படை சிப்பாய்களுக்கும், மேலும் 2 பேர் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்ததாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய அனைவரும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேநேரம், அண்மையில் ஓமானில் இருந்து இலங்கை வந்த நிலையில் தியத்தலாவை தனிமைப்படுத்தல் முகாமில் சிகிச்சை பெற்ற 3 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளது. இதன்படி, 335 நோயாளர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இலங்கையில் கடந்த சில தினங்களாக கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 477 ஆக அதிகரிப்பு - Reviewed by Author on April 26, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.