அண்மைய செய்திகள்

recent
-

ஊரடங்கு உத்தரவு நீடித்தால் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கம் ஏற்படும்! ஜனாதிபதி -


நாட்டில், குறிப்பாக மேல் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவை தளர்த்துவதற்கான முடிவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆதரித்துள்ளார்.

அத்துடன், ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தும் நீடித்தால் உள்ளூர் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் பிரதான ஆலோசகர் லலித் வீரதுங்கவுடன், கொரோனா வைரஸ் ஒழிப்பு மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புதல் சம்பந்தமான கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர்,

பொருளாதாரம் பெரும்பாலும் மேல் மாகாணத்தில் இயங்கும் வணிகங்களை சார்ந்துள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்கு ஊரடங்கு உத்தரவைத் தொடர்வதில் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

எனினும், அது நாட்டில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும். தற்போதைய கொரோனா வைரஸ் நெருக்கடி முடிந்ததும் இலங்கை புதிய சந்தைகளை குறிவைக்கும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க முதலில் கொரோனா வைரஸ் தொற்றுநோயிலிருந்து வெளிவரும் நாடுகளை பின்பற்றி இலங்கை செல்லும் என ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்த உதவும் வகையில் நாடுகளுடன் புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ள இலங்கை முயற்சிக்கும் என ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.
ஊரடங்கு உத்தரவு நீடித்தால் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கம் ஏற்படும்! ஜனாதிபதி - Reviewed by Author on April 21, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.