அண்மைய செய்திகள்

recent
-

இரத்த குழாய்களை சுத்தம் செய்து இதயத்தை ஆரோக்கியமாக வைக்கணுமா?


உயிர் வாழ்வதற்கான முதலான உறுப்புகளில் ஒன்று தான் இதயம். இது குருதிச் சுற்றோட்டத்தொகுதி கொண்டுள்ள எல்லா உயிரினங்களிலும் காணப்படும் ஒரு நாரியத் தசையாலான ஓர் உறுப்பாகும்.
இதன் தொழில் தொடர்ச்சியான சீரான முறையில் சுருங்கி விரிதலின் மூலம் உடல் முழுவதும் குருதியைக் குருதிக்குழாய்களின் வழியாகச் செலுத்துவது ஆகும்.

இதன்மூலம் குருதி உடலுக்குத் தேவையான உயிர்வளி மற்றும் ஊட்டப் பொருட்களை வழங்கி வளர்சிதைக் கழிவுப் பொருட்களை அகற்ற உதவுகின்றது.
இந்த உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகள் மிக பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

குறிப்பாக இதயத்திற்கு செல்லும் இரத்தத்தில் சிறிது குறைந்தாலும் இதய நோய்கள் அல்லது மாரடைப்பு ஏற்படும்.
எனவே, இது போன்ற உடலின் முக்கியமான உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தினசரி உடல் இயக்கமும் சத்து நிறைந்த உணவுகளும் முக்கியம் ஆகும்.
அந்தவகையில் இரத்த குழாய்களை சுத்தம் செய்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ள பசலைக்கீரை ஜூஸ் உதவிபுரிகின்றது.
ஏனெனில் பசலைக் கீரையில் புரதச்சத்து, இரும்புச் சத்து, பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் கால்சியம் ஆகியவை அதிக அளவில் உள்ளது.
பசலைக் கீரை உடலில் ஆரோக்கியமான இரத்த செல்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவும்.

அந்தவகையில் தற்போது இதயத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ள பசலைக்கீரை வைத்து எப்படி ஆரோக்கியமான ஜூஸ் தயாரிக்கலாம் என இங்கு பார்ப்போம்.
தேவையானப் பொருட்கள்
  • பசலைக் கீரை ஜூஸ் - 1/2 டம்ளர்
  • வறுத்த ஆளி விதை - 1 டேபிள் ஸ்பூன்.
ஜூஸ் செய்முறை
ஒரு டம்ளர் பசலைக் கீரையுடன் குறிப்பிட்ட அளவு ஆளி விதை சேர்க்க வேண்டும். நன்கு கலக்கி கொள்ளுங்கள்.
இந்த ஜூஸை தினமும் காலை உணவிற்கு பின் குறைந்தது 2 மாதத்திற்கு குடிக்கவேண்டும்.
இந்த ஜூஸை தினமும் குடித்து வரும் போது இயற்கையான முறையில் இதய இரத்தக் குழாயிகளை சுத்தம் செய்து, இதயத்தை எப்பொழுதும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
இந்த ஜூஸை குடிக்கும் நீங்கள் கண்டிப்பாக கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள், எண்ணெய் பலகாரங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டியது அவசியம்.
மேலும், தினமும் உடற்பயிற்சி செய்வது உடல் பருமன் அதிகரிக்காமல் தடுத்து உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கும்.

இரத்த குழாய்களை சுத்தம் செய்து இதயத்தை ஆரோக்கியமாக வைக்கணுமா? Reviewed by Author on April 24, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.