அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மடுக்கல்வி வலயத்தில் முதல் தடவையாக 9A வரலாற்று சாதனை புரிந்த மாணவன் T.டேவதரன் ஆண்டான்குளம் R.C.T.M.S வீடியோ&படம்

2019ம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த(சா/தர) பரீட்சைமுடிவுகள் வெளியாகியுள்ள நிலையில்....
மன்னார் மடுக்கல்வி வலயத்தில் முதல் தடவையாக 9A பெற்று வரலாற்று சாதனை புரிந்த ஆண்டான்குளம் R.C.T.M.S மாணவன் T.டேவதரன்.
 மன்னார் மடுக்கல்வி வலயம் தொடங்கி இதுவரை காலப்பகுதியில் சுமார் 21 வருடங்களுக்கு பிறகு முதல் தடவையாக ஆண்டான்குளம் R.C.T.M.S  T.டேவதரன் எனும் மாணவன் 9A சித்திகளைப்பெற்று வரலாற்று சாதனை புரிந்துள்ளான் இம்மாணாவன்  புலமைப்பரிசில் பரீட்சையிலும் 184 புள்ளிகளைப்பெற்று மாவட்ட ரீதியில் 2ம் டத்தினையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது,

MN.ANDANKULM R.C.T.M.S GCE O/L-2019
சிறந்த பெறுபேறுகளைப்பெற்றுக்கொண்ட மாணவர்கள் விபரம்....

9A
  • T.DEVATHARAN
8A,B
  • T.METRO SAHAN
  • A.YURESICAKA
5A,3B,C
  • J.THAKCIKA

  •  பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் - 30
  • சித்தியடைந்த மாணவர்கள் -26
  • சித்தி வீதம்=76.% 
  • PENDIG-4
  • மடுக்கல்வி வலய மட்டத்தில் அதிக A  சித்திக்ளையும் அதிக C  சித்திகளையும் பெற்றுக்கொண்ட 2வது பாடசாலையாக உள்ளது.

400 மாணவர்கள் தோற்றி     ஒரு மாணவன்  9A சித்தி அத்தோடு ஏனைய மாணவர்களும் சிறப்பா சித்தி பெற்று உயர்தரம் கல்விகற்க தகுதி பெற்றுள்ளார்கள் என்பது மகிழ்ச்சிதான் ஆனாலும் இன்னும் அதிக முயற்சிகள் மேற்கொன்டுள்ளோம்  வடமாகாண ரீதியில் 12 வலயங்களில் எமது வலயம் 67.2 புள்ளிகளைப்பெற்று 05ம் இடத்தில் உள்ளது. இன்னும் முன்னேற்றம் பெற பல திட்டங்களை வகுத்துள்ளோம் என்றார் மடுக்கல்வி வலய பணிப்பாளர் திருவாளர்.க.சத்தியபாலன் அவர்கள்

 இச்சாதனையை நிகழ்த்துவதற்கு சிறப்பாக  பணி புரிந்த அனைத்து ஆசிரியர்களுக்கும்,பக்கபலமாக இருந்த பெற்றோர்களுக்கும் பாடசாலையின்  அதிபரான ஞானப்பிரகாசம் அன்ரனிப்பிள்ளை அவர்களுக்கும்  மடுக்கல்வி வலய பணிப்பாளர் திருவாளர்.க.சத்தியபாலன் அவர்களுக்கும் பாடசாலைச்சமூகத்திற்கும் நியூமன்னாரின் இணையக்குழுமம் சார்பாக வழ்த்திப்பாராட்டுகின்றோம்.

தகவல் -கல்லூரி முதல்வர்
தொகுப்பு-வை.கஜேந்திரன்-

மன்னார் மடுக்கல்வி வலயத்தில் முதல் தடவையாக 9A வரலாற்று சாதனை புரிந்த மாணவன் T.டேவதரன் ஆண்டான்குளம் R.C.T.M.S வீடியோ&படம் Reviewed by Author on May 05, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.