அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டதில் 100 ஏக்கரில் சுண்டக்காய் செய்கை ஏற்றுமதியின்றி தவிக்கும் விவசாயிகள்


மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட சில கிராமங்களில் பெருமளவான தோட்டச் செய்கைகள்  இடம் பெற்று வருகின்றது.

குறித்த தோட்டச் செய்கையுடன் 'சுண்டைக்காய்' (திப்பட்டு) என்று அழைக்கப்படுகின்ற ஒரு மரக்கறி பயிர் செய்யப்பட்டு வருகின்றது.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சன்னார், ஈச்சளவக்கை,பெரியமடு ஆகிய கிராமங்களில் பல இலட்சம் ரூபாய் முதலிட்டு குறித்த பயிர்ச் செய்கையை சுமார் நூறு ஏக்கர் நிலப்பரப்பில் குறித்த பயிர்ச் செய்கை பாரிய அளவில் முன்னெடுக்கப்படுகின்றது.

-வட மாகாணத்தில் மக்கள் விரும்பி உண்பது இல்லை.ஆனால் தென் பகுதிக்க ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

குறித்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அதிகளவானவர்கள் தமது வாழ்வாதார தொழிலாக குறித்த பயிர்ச் செய்கையினை முன்னெடுத்து வருகின்றனர்.

சுண்டைக்காய் முற்றுவதற்கு முன் அவற்றை ஆய்ந்து சந்தைப்படுத்த வேண்டும்.ஆனால் தற்போது காய் முற்றும் நிலையில் காணப்படுகின்றது.

-கொரோனா அச்சுரூத்தல் காரணமாக அவற்றை ஆய்ந்து ஏற்றுமதி செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.

-இதனால் பல குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில் காணப்படுகின்றனர்.தன்னிச்சையாக 'சுண்டைக்காயை பயிரிட்ட தோட்ட செய்கையாளர்களின் நிலை கவலையளிக்கின்றது.





மன்னார் மாவட்டதில் 100 ஏக்கரில் சுண்டக்காய் செய்கை ஏற்றுமதியின்றி தவிக்கும் விவசாயிகள் Reviewed by Author on May 05, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.