அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் சிறுபோக நெற் செய்கையை வாய்க்கால் அமைப்புகளுக்கு கொடுக்காமல் விவசாயிகளுக்கு கொடுக்க தீர்மானம்.

மன்னாரில்  சிறுபோக நெற் செய்கையை வாய்க்கால் அமைப்புகளுக்கு கொடுக்காமல் விவசாயிகளுக்கு கொடுக்க தீர்மானம்.இதே வேளை 30-04-2020 வியாழக்கிழமை காலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் கட்டுக்கரை குளத்திற்கான சிறு போக செய்கைக்கான கூட்டம் இடம் பெற்றது.

கமக்கார அமைப்புக்களும் வாய்க்கால் அமைப்புக்களும் தெரியப்படுத்தி இருந்த நிலையில்  குறித்த கூட்டத்தில் 10 வாய்க்கால் அமைப்புக்களின் பிரதி நிதிகள் மாத்திரமே கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது  விவசாய திணைக்கள அதிகாரிகள்,பிரதேசச் செயலாளர்கள்,மேலதிக அரசாங்க அதிபர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.குறித்த கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

600 ஏக்கர் சிறு போக நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது. ஏனைய 400 ஏக்கர் உப தானிய செய்கைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
எனவே குறித்த 600 ஏக்கரையும் வாய்க்கால் அமைப்புகளுக்கு வழங்காமல் நேரடியாக குறைந்த நிலங்களை கொண்டு விவசாயம் செய்கின்ற மக்களுக்கு அவற்றை 1200 துண்டுகளாக பிரித்து வழங்குவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்னும் ஏழு நாட்களுக்குள் அதற்கான பட்டியல் எங்களுக்கு கிடைக்கப்பெறும் பட்சத்தில் நாங்கள் அந்த 1200 பேரையும் சரியாக அடையாளம் கண்டு அவர்கள் நேரடியாக பயிர் செய்கையை செய்வது என்றும், எக்காரணம் கொண்டும் பிரிக்கப்பட்ட துண்டுகள் யாருக்கும் விற்பனை செய்யவோ அல்லது வேறு எந்த முறையிலும் பயண்படுத்த வழங்கவோ முடியாது.

உரியவர்கள் நேரடியாக விதைத்து பலன் பெற வேண்டும்.இதற்கு மேலதிகமாக 20 ஏக்கர் நிலம் விதை உற்பத்தி திணைக்களத்திற்கு பயிர்ச் செய்கை செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கான நீர் வினியோகத்தை நீர்ப்பாசன பணிப்பாளரை வழங்க கோரியுள்ளேன். மேலும் உரம் மாணிய அடிப்படையில் இரு தரப்பினருக்கும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1200 நபர்களுடைய பெயர் பட்டியல் கிடைக்கப் பெறுகின்ற பட்சத்தில் இறுதியாக  10 ஆம் திகதி நீர் திறப்பு மற்றும் நீர் விநியோக திகதிகளும் தீர்மானிக்கப்பட்டு குளம் பயிர்ச் செய்கைக்காக திறந்து விடப்படும்.

வாய்க்கால் அமைப்புகளுக்கு நேரடியாக கொடுக்காமல் 1200 விவசாயிகளுக்கு கொடுக்க தீர்மானித்ததன் நோக்கம் அரசாங்கத்தின் விவசாய உற்பத்தி திட்டத்தின் கீழ் எல்லா மக்களும் பயண் பெற வேண்டும் என்றும் குறிப்பாக ஏழை விவசாயிகள் 1200 பேர் வரை இந்த விவசாய செய்கையை மேற்கொள்ள முடியும் என்றும், எங்களுடைய மக்களுக்கு இச் சிறுபோக செய்கையின் மூலம் உற்பத்தி பொருட்களை சேமித்து வைக்க முடியும் என்று எதிர் வரும் காலங்களில் கொரோனா தாக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் பட்டினிச்சாவு ஏற்படலாம் என்கின்ற எதிர்ப்புடன் எல்லோருக்கும் நெல் கிடைக்க வேண்டும் என்கின்ற எதிர் பார்ப்புடன் 1200 பேரூக்கும் நெற் செய்கையை மேற்கொள்ள இம்முறை ஒரு புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.





மன்னாரில் சிறுபோக நெற் செய்கையை வாய்க்கால் அமைப்புகளுக்கு கொடுக்காமல் விவசாயிகளுக்கு கொடுக்க தீர்மானம். Reviewed by Author on May 01, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.