அண்மைய செய்திகள்

recent
-

கொரோனாவிலிருந்து மீண்டவரின் ரத்தம் மூலம் அளிக்கப்பட்ட சிகிச்சையால் ஒருவர் உயிரிழப்பு! பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல் -


"இந்தியாவின் மும்பையில் பிளாஸ்மா தெரபி சிகிச்சை பெற்ற நபர் திடீரென பலியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா பாதிப்பு இந்தியா முழுக்க தீவிரம் அடைந்து வருகிறது. கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா மாறியுள்ளது. மகாராஷ்டிராவில் 11,506 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 485 பேர் மகாராஷ்டிராவில் பலியாகி உள்ளனர்.

மும்பையில் மட்டும் 7,812 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு 295 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். கொரோனாவிற்கு எதிராக பிளாஸ்மா சிகிச்சையை மகாராஷ்டிரா கையில் எடுத்துள்ளது.

இந்த நிலையில் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை ஒருவருக்கு கொரோனாவிற்காக பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. 53 வயது உடைய இந்த நபருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. இவரின் உடல் நிலை மிக மோசமாக இருந்தது.
இதனால் வெண்டிலேட்டர் உதவியுடன் இவர் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் இவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இவருக்கு 200 எம்எல் பிளாஸ்மா அளிக்கப்பட்டது. ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு குணமடைந்த நபர் மூலம் பிளாஸ்மா எடுக்கப்பட்டு அது இவருக்கு அளிக்கப்பட்டது.

இந்த பிளாஸ்மாவில் இருக்கும் ஆண்டிபாடிகள் முதலில் நன்றாகவே வேலை பார்த்து உள்ளது. அவர் முதல் 24 மணி நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக உடல் நிலை தேறி வந்து இருக்கிறார்.

ஆனால் திடீர் என்று அவரின் உடல்நிலை மிக மோசமானது. திடீர் என்று கடந்த திங்கள் கிழமை அவரின் உடல்நிலை மோசமானது. அதன்பின் நாளுக்கு நாள் அவரின் உடல் நிலை நலிவடைந்து கொண்டே சென்றது.
பிளாஸ்மா மாற்றியதன் காரணமாக இவருக்கு ரத்தத்தில் இன்பெக்சன் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இவரின் உடல் தொடர்ந்து மோசம் அடைந்தது. முடிவில் கடந்த புதன் கிழமை அவர் பலியானார்.
இவரின் பிரேத பரிசோதனை அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மோசமான சுவாச கோளாறு நோய்க்குறி மற்றும் செப்டிசீமியா காரணமாக இவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நாடு முழுக்க பிளாஸ்மா தெரபி மீது அச்சம் ஏற்பட தொடங்கி உள்ளது. கொரோனாவிற்கு எதிராக இதை எப்படி செய்வது என்ற கேள்வி எழுந்துள்ளது. பிளாஸ்மா தெரபி என்பது ஒருவரின் ரத்தத்தில் இருந்து இன்னொருவரின் ரத்த செல்களுக்கு ஆண்டிபாடிகளை கடத்துவது ஆகும்.
கொரோனா தாக்கி குணமடைந்த ஒருவரின் ரத்தத்தின் பிளாஸ்மாவில் இருக்கும் எதிர்ப்பு சக்தி செல்களை இன்னொருவரின் ரத்தத்திற்கு அனுப்புவார்கள். பொதுவாக கொரோனா தாக்கி அதில் இருந்து குண்டமடைந்த ஒருவரின் உடலில் அந்த கொரோனாவிற்கு எதிரான எதிர்ப்பு சக்தி செல்கள் அதிகம் இருக்கும்.

இந்த செல்களை வைத்துதான் இந்த சிகிச்சையை மேற்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவிலிருந்து மீண்டவரின் ரத்தம் மூலம் அளிக்கப்பட்ட சிகிச்சையால் ஒருவர் உயிரிழப்பு! பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல் - Reviewed by Author on May 03, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.