அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பலத்தை பலவீனப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது-முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்குள் இருந்து கொண்டு ஒரு சிலர் தமிழ் தேசியக்கூட்டமைப்பை பலயீனப்படுத்துகின்ற, நம்பிக்கை அற்ற செயற்பாட்டை உருவாக்குகின்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

எனவே மக்களாகிய நீங்கள் யாரை தெரிவு செய்ய வேண்டும்? யாரை தெரிவு செய்யக் கூடாது என்கின்ற தீர்மானத்தை எடுப்பது உங்கள் கைகளில் உள்ளது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

-மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (19) வெள்ளிக்கிழமை மதியம் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

-அவர் மேலும் தெரிவிக்கையில்,,

தமிழ் தேசியக்கூட்டமைப்பு நிச்சையமாக கூடுதலான அசனங்களை பெற்றுக்கொள்ளும் அதில் எந்த சந்தேகமும் இல்லை.இன்று சுமார் 400 இற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வேட்பாளர்கள் சுயேட்சைக்குழுக்களிலும்,அரசாங்கத்தோடு மறைமுகமாக சொந்தம் கொண்டாடுகின்றவர்களும் கள மிறக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஒரு சூழ்ச்சியாக தமிழ் தேசியக்கூட்டமைப்பை பலவீனப்படுத்தும் ஒரு செயற்பாடாகவே இந்த சுயேட்சைக்குழுக்கள் மற்றும் மறைமுகமாக அரசாங்கத்தோடு செயல் படுகின்றவர்கள் போட்டியிடுகின்றமைக்கான ஒரு காரணமாக உள்ளது.தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பலத்தை பலவீனப்படுத்தும் வகையில் குறித்த நடவடிக்கைகள் இடம் பெற்றுள்ளது.

சுயேட்சைக்குழுக்கள் மற்றும் அரசாங்கத்தோடு மறைமுகமாக சொந்தம் கொண்டாடுகின்றவர்களிடம் நான் ஒன்றை கேட்கின்றேன் வடக்கு கிழக்கில் குறிப்பாக வன்னி மாவட்டத்தில் அதிகரித்து காணப்படுகின்ற இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஆகியோரின் பிரசன்னத்தை கட்டுப்படுத்த முடியுமா?

இன்று கொரோனா வைரசை சாட்டாக வைத்து வடக்கு கிழக்கில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 
ஆனால் தென் பகுதியில் இவ்வாறான சோதனைச்சாவடிகள் இல்லை. சிங்கள் மக்கள் மத்தில் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் வகையில் இன துவேச அடிப்படையில் அடக்கு முறையை கொண்டு வருகின்ற  சூழலை உருவாக்கி உள்ளனர்.

-இதனை சுயேட்சைக்குழுக்கள் மற்றும் அரசாங்கத்தோடு மறைமுகமாக சொந்தம் கொண்டாடுகின்றவர்கள் தேர்தல் காலங்களில் முற்றாக நீக்கி விட உங்களினால் முடியுமா?

-புதிய ஜனாதிபதியாக வந்துள்ள கோட்டபாய ராஜபக்ஸ மற்றும் தற்போதைய பிரதமர் ஆகியோர் எங்களுடைய மக்கள் சார்ந்த பிரச்சினைகளில் எந்த ஒரு அக்கரையினையும் காட்டாதவர்களாகத்தான் இருந்து கொண்டு இருக்கின்றார்கள் என்பதனை குறிப்பிட விரும்புகின்றேன்.

-தற்போது வந்துள்ள பலர் தமிழ் தேசியக்கூட்டமைப்பு என்னத்தை செய்துள்ளது என்கின்ற வினாவை கால காலமாக தேர்தல் காலங்களில் பிரச்சாரமாக செய்து வருகின்ற நிலை தொடர்ந்து கொண்டு இருக்கின்றமை மக்களுக்கு தெரியும்.
மக்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பக்கம் நிற்பார்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை.

எங்களுடைய போராட்டத்தின் விழுமியங்கள்,போராளிகளின் தியாகங்கள், மக்களின் அர்ப்பணிப்புக்கள் எல்லாம் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஒரு அங்குரார்ப்பணமாகத்தான் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்குள் இருந்து கொண்டு ஒரு சிலர் தமிழ் தேசியக்கூட்டமைப்பை பலயீனப்படுத்துகின்ற மற்றும் நம்பிக்கை அற்ற செயற்பாட்டை உருவாக்குகின்ற நடவடிக்கைகளில் ஈடு படுகின்றனர்.

எனவே மக்களாகிய நீங்கள் யாரை தெரிவு செய்ய வேண்டும்? யாரை தெரிவு செய்யக் கூடாது என்கின்ற தீர்மானத்தை எடுப்பது உங்கள் கைகளில் உள்ளது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கொள்கை,தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உருவாக்கம் போன்ற வரலாற்றை மாற்றி அமைக்க முடியாது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உருவாக்கம் புனிதத்துடன் இருக்கின்ற ஒரு விடையமாக இருக்கின்றது.
அதற்கான ஒரு சாட்சியாக நான் இன்றைக்கும் உயிரோடு இருக்கின்றேன்.

சாதாரண சூழ்நிலையில் தற்போது களம் இறங்கியுள்ளவர்கள் எங்களைப் பற்றி கூறுவது வேடிக்கையாகவே உள்ளது. 
மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். சாத்தான் வேதம் ஓதுகின்றது என்கிறது போல் கருணா விடுதலைப்புலிகளுடன் இருந்து பிரிந்த பின் இன்று ஒரு தேசிய வாதியாக இதே மஹிந்த அரசாங்கத்துடன் இருந்து பல்வேறு விடையங்களை குறிப்பாக போராட்டத்திற்கு எதிராக கருத்துக்களை கூறியவர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவிராஜ்,ஜோசப் பரராஜசிங்கம்,   ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட பின்பும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தடம் மாறவில்லை.

அவசர கால சட்டத்தை எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தார்கள்.தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த 5 வருடங்களில் செய்த வேளைத்திட்டங்களை வைத்து அரசிற்கு முன்டு கொடுத்தோம் என்கின்ற போலிப்பிரச்சாரத்தை எங்களினால் ஏற்றுக்கொள்ள முடியாது.

-எங்களைப் பொறுத்தவகையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு சந்தர்ப்பத்தை பயண்படுத்தியுள்ளது. இரண்டு கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைக்கின்ற போது சர்வதேசத்தின் பணிப்பை நாங்கள் செய்து காட்டியுள்ளோம்.

 சர்வதேசத்திடன் நியாயத்தை கோருவதற்கான சந்தர்ப்பம் இன்று எங்களுக்கு கிடைத்துள்ளது.கடந்த அரசாங்கத்திற்கு விட்டுக் கொடுப்புக்களையும், ஆதரவினையும் வெளியில் இருந்து வழங்கினோம். 

இனப்பிரச்சினைக்கான தீர்வு, மக்களின் அன்றாட பிரச்சினைகளை நிவர்த்தி செய்தல் உள்ளிட்டவற்றை நிறைவேற்றிக் கொள்ளுவதற்காகவே ஆதரவை வழங்கினோம்.

அரசாங்கத்திற்கு 3/2 பெரும்பான்மையை வழங்க தயார் என ஒரு சிலரினால் கூறப்படுகின்ற போதும் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள தயார் இல்லை.

வருகின்ற அரசாங்கம் எங்களுடைய மக்களுக்கு எதனையும் செய்து தராது என்பதனை எங்களினால் உணர்த்த முடிகின்றது.
எங்கள் பக்கம் இருக்கின்ற நியாயத்தை சர்வதேசம் உடனடியாக செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழ் தேசியக்கூட்டமைப்பு மேற்கொள்ளும்.என அவர் மேலும் தெரிவித்தார்.



தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பலத்தை பலவீனப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது-முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன். Reviewed by Author on June 19, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.