அண்மைய செய்திகள்

recent
-

. உடுவில் கால்நடை வைத்திய பணிமனையின் கால்நடை மருத்துவர் அதிகார துஷ்பிரயோகங்கள்

உடுவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வறிய மக்கள் தங்களது வாழ்வாதரத்திற்காக ஆடு,மாடு,கோழி போன்ற விலங்குகள் மற்றும் பறவைகளை வளர்த்து வருகின்றார்கள்.

இந்நிலையில் இக் கால்நடைகளுக்கு மருத்துவ சேவை வழங்க வேண்டிய உடுவில் கால்நடை வைத்திய பணிமனை உரியமுறையில் சேவையை வழங்காது அலட்சியமாக நடந்து கொள்கின்றது. சனிக்கிழமைகளில் காலை 6.30 மணியில் இருந்து 7.30 மணிவரை கோழிகளுக்கான தடுப்பு மருந்து வழங்கப்படும் என குறித்து பணிமனையின் விளம்பர பலகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் பயனாளிகள் காலை 6.30 மணிக்கு பணிமனைக்கு முன்பு வரிசையில் நிற்கின்ற பொழுதும் உடுவில் கால்நடை வைத்திய பணிமனையின் அதிகாரிகள் காலை 7.30 மணிக்கே அலுவலகத்திற்கு சமூகமளிக்கின்றார்கள்.

இதனால் சேவைநாடிகள் சில மணி நேரம் வரிசையில் காத்து நிற்கவேண்டியுள்ளது. இதேவேளை கொரோனா தோற்றுக் காரணமாக சமூக இடைவெளி மற்றும் கூட்டம் கூடுவதே தவிர்க்குமாறு ஜனாதிபதி சுற்று நிரூபத்தில் குறிப்பிட்டு உள்ள அதேவேளை இவ்வதிகாரிகளின் அசமந்த போக்கால் ஜனாதிபதியின் சுற்று நிருபமும் மீறப்பட்டுள்ளது.

மேலும் கால்நடை மருத்துவர்  சேவைநாடிகளை தரக்குறைவாக பேசுவதால் பலர் குறித்த அரச கால்நடை மருத்துவ பணிமனையை நாடாது. தனியார் கால்நடை வைத்திய நிலையங்களை நாடுவதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

இது குறித்து கால்நடை வளர்பாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்தெரிவிக்கையில் கால்நடை மருத்துவர் சேவைநாடிகளை தரக்குறைவாக நடத்துவதால் தாங்கள் தனியார் அரச கால்நடை வைத்திய நிலையங்களை நாடுவதாகவும் இதனால் கால்நடைகளுக்கு பாரிய மருத்துவ செலவு .ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.......!!!









. உடுவில் கால்நடை வைத்திய பணிமனையின் கால்நடை மருத்துவர் அதிகார துஷ்பிரயோகங்கள் Reviewed by Author on June 06, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.