அண்மைய செய்திகள்

recent
-

வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய பொங்கல் உட்சவத்தில் இராணுவ தளபதி செய்தி சேகரித்த ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்.....

வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உட்சவத்தில் இராணுவ தளபதி கலந்துகொண்டுள்ளனர் அவர் வருகைதந்து ஆலய வளாகத்தில் உள்நுழையும் போது ஆலய நியதிக்கு அமைய மேலாடைகளை கழற்றிவிட்டு சென்றார் இதன்போது ஆலய வளாகத்தில் வழிபாடுகளில் ஈடுபடுவதை ஊடகவியலாளர் ஒளிப்பதிவு செய்துள்ளார் இதன்போது இராணுவத்தினர்  ஊடகவியலாளரை ஒளிப்பதிவு செய்யவேண்டாம் என தெரிவித்து கமராவை கையால் மறைத்து கமராவை தட்டி விட்டு அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்

வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இன்றய தினம் (8) அதிகாலை சிறப்புற ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது

இந்நிலையில் இராணுவ தளபதி சவேந்திர சில்வா அவர்கள் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் பௌத்த மத துறவிகள் உள்ளிடட குழுவினர்  இன்று மாலை 5 மணியளவில் ஆலயத்தில் வழிபாடுகளில் கலந்துகொண்டதோடு ஆலய வளாகத்தில் மரக்கன்று ஒன்றினையும் நாட்டி வைத்து வறிய குடும்பங்கள் சிலவற்றுக்கு ஆலய முன்றலில் வைத்து உலருணவு பொதிகளை வழங்கி வைத்தார்

இந்நிலையிலேயே அவர் ஆலயத்தின் உள்ளே வழிபாடுகளில் இருந்த நேரம் செய்தி சேகரிக்க தடை விதித்ததோடு செய்தி சேகரித்த ஊடகவியலாளரை சூழ்ந்துகொண்ட படையினர் அவரின் கமராவில் இருந்த வீடியோக்களை அளிக்குமாறும் மிரட்டியதோடு அவரை சூழ்ந்து படையினர் நின்று அச்சுறுத்தியுள்ளனர் இருப்பினும் ஊடாவியலாளரை ஆலயத்துக்கு வெளியில் அழைத்து சென்று விசாரணைகளை மேற்கொண்டு அச்சுறுத்தியுள்ளனர் வீடியோவை அளிக்க ஊடகவியலாளர் மறுத்த நிலையில் இந்த வீடியோக்கள் வெளியே வர கூடாது என எச்சரித்துள்ளனர்

இருப்பினும் மக்களுக்கு உலருணவு வழங்கியமை மர  நடுகை என்பவற்றுக்கு வீடியோ பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டது

இவ்வாறு ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபடுவதை ஏன் வெளியிட கூடாது என்பதும் இதனால் தென்பகுதி மக்கள் மத்தியில் எதிர்ப்பை சேகரிக்க நேரிடும் என்பதும் இதற்கான காரணமா என சந்தேகம் எழுந்துள்ளது ..











வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய பொங்கல் உட்சவத்தில் இராணுவ தளபதி செய்தி சேகரித்த ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்..... Reviewed by Author on June 09, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.