அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் : உணவுச் செய்கை ஊடாக நாங்கள் தன்னிறைவு அடையக்கூடிய நிலமை ஏற்படும்-அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ்.

மன்னார் மாவட்டத்தை பொறுத்த வகையில் உப உணவுச் செய்கை ஊடாக நாங்கள் தன்னிறைவு அடையக்கூடிய நிலமை ஏற்படும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தின் இவ்வருடத்திற்கான (2020)  சௌபாக்கியா வீட்டுத்தோட்டத்தின்  முன்னேற்றம் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை காலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் இடம் பெற்ற கலந்துiராடலில் மாவட்ட மேலதிக செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார்,பிரதேச செயலாளர்கள்,உற்பட அழைக்கப்பட்ட திணைக்களங்களின் பிரதி நிதிகளும் கலந்துகொண்டனர்.
இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்...
சௌபாக்கியா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும்   உப உணவு பயிர்ச்செய்கை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. 
மன்னார் மாவட்டத்தில் 14 ஆயிரம் பக்கட் விதைகள் மற்றும் பயிர்கள் மக்களுக்கு வினியோகிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாவட்டத்தில் உள்ள 5 பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் சமூர்த்தி திட்டத்தின் ஊடாக 2 ஆயிரம் பக்கட் விதைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் வீட்டுத்தோட்ட செய்கை ஊடாக ஊக்குவிப்பதோடு, உப பயிர்ச் செய்கைக்கான கௌப்பி, பயறு, நிலக்கடலை மற்றும் உழுந்து, எள்ளு போன்ற தானியங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.  அதன் அடிப்படையில் கடந்த வருடத்தில் மோற்கொள்ளப்பட்ட அடைவை விட கூடுதலாக இது வரை செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதனை விட இன்னும் கூடுதலாக எதிர் பார்க்கப்பட்டுள்ளமையினால் அடுத்து வருகின்ற ஒரு மாதத்தினுள் மிகுதி செய்கை மேற்கொள்ளப்படும்.வண்டு மற்றும் பூச்சு போன்றவற்றின் தாக்கங்களில் இருந்து பாதுகாக்கும் பட்சத்தில் பயிர்ச் செய்கை வெற்றியடையக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது.மன்னார் மாவட்டத்தை பொறுத்த வகையில் உப உணவுச் செய்கை ஊடாக நாங்கள் தன்னிறைவு அடையக்கூடிய நிலமை ஏற்படும்.

தம்புள்ளை,யாழ்ப்பாணம், முழங்காவில் போன்ற பகுதிகளில் இருந்து உற்பத்திகளை பெற்றுக்கொள்ளும் நிலை காணப்படுகின்றது.
எமது உற்பத்திகளில் ஒரு நிறைவு காணப்படும் பட்சத்தில் உப தானிய செய்கையில் நாங்கள் ஒரு நிறைவை அடைய முடியும்.

குறித்த செய்கையின் முன்னெற்றம் தொடர்பாக பிரதேச செயலாளர்கள் அவதானித்து எனக்கு அறியத்தருமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளேன். என அவர் மேலும் தெரிவித்தார்.



மன்னார் : உணவுச் செய்கை ஊடாக நாங்கள் தன்னிறைவு அடையக்கூடிய நிலமை ஏற்படும்-அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ். Reviewed by Author on June 09, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.