அண்மைய செய்திகள்

recent
-

வன்னியில் போராட்ட சிந்தனையுடன் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு சோரம் போகவில்லை-முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்.

ஆயுதப் போராட்டத்தை மௌனிப்பதற்காக  உலக நாடுகளோடு சேர்ந்து அந்த சாதியைச் செய்தார்களோ அதே போல இந்த ஆயுதப் போராட்டத்தின் எழுச்சியிலே  உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைத்து நாசம் செய்வதற்கான திட்டத்தை பல நபர்களை களம் இறக்கி சாதி முயற்சியை மேற்கொள்ளுகின்றனர் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,வேட்பாளருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

-மன்னார் முருங்கன் பகுதியில் நேற்று வியாழக்கிழமை(16) மாலை இடம் பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுமையிலேயே வெர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,

தமிழ் தேசியக்கூட்டமைப்பு சோரம் போகவில்லை.அதன்  உருவாக்கம் வன்னியில் போராட்ட சிந்தனையுடன் உருவாக்கப்பட்டது.
ஒரு தியாக சிந்தனையோடு உருவாக்கப்பட்டது. அது தொடர்ச்சியாக தன்னுடைய மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று உருவாக்கப்பட்டது. அதற்கான சாட்சிகள் இருக்கிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கிற ஒவ்வொரு அங்கத்தவரும், ஒவ்வொரு  பொது மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது பற்று வைத்துள்ள ஒவ்வொரு தமிழனும் அவன் தமிழனாகத்தான் இருக்கின்றானே தவிர   அவன் தடுமாற மாட்டான்   என்பதை தொடர்ந்து எங்களுடைய மக்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.சாதித்துக் கொண்டிருக்கிறார்கள.; வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்றைக்கு கால்,கை,கண் இல்லாதவர்கள் எல்லா இயக்கங்களிலும் இருக்கின்றார்கள்.

அவர்கள் ஏன் அந்த நிலமைக்கு வர வேண்டும்?.அவர்கள் தேர்hலில் போட்டியிடுகின்ற சிங்களவர்களிடம் கையேந்தி உங்களுக்கு வேளை செய்கின்றேன் என்று போயிறுக்க முடியும்.அவ்வாறு அவர்கள் செல்லவில்லை.

இன்றைக்கும் பட்டினி இருக்கின்ற  வீடுகள் இருக்கின்றது. போராளிகள் அத்தனை பேரூம் வசதியாக என்றைக்கும் இருக்கவில்லை.
இன்றைக்கும் அவர்கள் பட்டினியோடு தான் இருக்கின்றார்கள்.அவர்களுக்கு மனைவி , பிள்ளைகள் இருக்கின்றது.
அவர்கள் தியாகத்துடனே வேலை செய்கின்றார்கள்.அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை சிந்திக்கவில்லை.இது தான் எங்களுடைய தேசத்தின் வரலாறு.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்துகின்ற அதற்கு ஆணி வேராக இருக்கும் எங்களுடைய உறவுகள் நீங்கள்   ஒருக்காலும் சலைக்க மாட்டீர்கள்.     மன சஞ்சலப் படுகின்றவர்களுக்கு நீங்கள் எடுத்துக் கூற வேண்டும் என்பது தான் எங்களுடைய கருத்தாக இருக்கின்றது.

-தேர்தல் முடிந்தவுடன் புதிதாக முளைத்த சுயேட்சைக்குழுக்கள் எல்லாம் எங்கே போனது என்று தெரியாது.காணாமல் போய் விடும்.விக்ணேஸ்வரன் அவர்களும் காணாமல் போய் விடுவார். யாரையும் தாக்கி கதைக்க வேண்டிய அவசியம் இல்லை.இருந்தாலும் ஆதங்கம் எமக்கு உள்ளது.

-தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைக்கப் போகின்றார்கள். எப்படி ஆயுதப் போராட்டத்தை மௌனிப்பதற்காக  உலக நாடுகளோடு சேர்ந்து அந்த சாதியைச் செய்தார்களோ அதே போல இந்த ஆயுதப் போராட்டத்தின் எழுச்சியிலே  உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைத்து நாசம் பண்ணுவதற்கான திட்டத்தை பல நபர்களை களம் இறக்கி   நாசம் பண்ணுவதற்காக சாதி முயற்சியை மேற்கொள்ளுகின்றனர்.

எப்படி எங்களுடைய மக்களை அழித்தார்களோ இந்த மஹிந்த ராஜபக்ஸ மற்றும் இன்றைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச ஆகியொர் எப்படி கொத்துக் கொத்தாக எங்களுடைய   மக்களை கொண்று குவித்தார்களோ அதே நிலைமை போல எங்களுடைய தமிழ் தேசியக் கூட்டமைப்பை   அற்ப சொற்ப ஆசைகளுக்காக ஆசைப்படுகின்ற சுயேட்சைக் குழுக்களையும் ஏனையவர்களையும் இறங்கி   தமிழ் தேசியக் கூட்டமைப்பை அழிக்கின்ற போது உங்களுக்காக குரல் கொடுக்க, எங்களுக்காக தட்டிக்கேட்க யாருமே இருக்க மாட்டார்கள்.

மஹிந்த ராஜபக்ச சொல்வது போல இந்த நாட்டிலே இலங்கையிலே  தமிழர்கள் என்று பூர்வீகம் இல்லை. 
யாரும் வாழலாம் என்று சொல்லுகின்ற அளவிற்கு எங்களுடைய   வன்னி மாவட்டம் அனைத்து மக்களாலும் நிறப்பப்படும் சிங்கள மக்களால் நிறப்பப்படும் எல்லாரும் இந்த தேசத்தில் வாழ்ந்தார்கள் என்று சொல்லுகின்ற வரலாற்றை அவர்கள் எழுதப் போகின்றார்கள்.

தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்து இந்த மண்ணுக்காக சண்டையிட்டவர்கள்.

 இந்த மண்ணை மீட்பதற்காக தன்னுயிரை தந்தவர்கள் தமிழர்கள் என்று சொல்லுகின்ற   வரலாற்றை அளிக்க நினைக்கின்றார்கள். அந்த சந்தர்ப்பத்தை தமிழர்களாகிய நாங்களும் சேர்ந்து செய்யப் போகிறோமா? என்பது தான் இன்றைய கேள்வியாக இருக்கிறது.
இந்த விடயத்தில் தமிழர்களாகிய நாங்கள் ஒன்று  சேர வேண்டும்.வரலாற்றை சொல்லகின்ற போது அதனை ஏற்றுக்கொள்ளுகின்ற மக்கள் முட்டாள்கள் இல்லை.

உணர்வு பூர்வமான தன்னுடைய செயல்பாட்டை செய்கின்ற மக்கள் தான் எங்களுடைய மக்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு  உள்ளே இருந்து சண்டை பிடிக்கும்.   ஒரு குடும்பம் என்றால் உள்ளே இருந்து தான் சண்டை பிடிப்பார்கள்.வெளியில் இருந்து சண்டை பிடித்தால் அது குடும்பம் இல்லை.

எனவே தமிழ் தேசியக்கூட்டமைப்பை சிதைப்பதற்கு யாருக்கும் உரித்து இல்லை.வீட்டுச் சின்னம் விடுதலையோடு உருவாக்கப்பட்ட சின்னம்.இதனை கைப்பற்றவோ, உரிமை கோரவோ யாருக்கும் முடியாது.

இரத்தம் சிந்தப்பட்ட சதைகளின் ஊடாக  சின்னா பின்னமாக கிடக்கின்ற அந்தச் சந்தர்ப்பத்திலும் உருவாக்கப்பட்ட உயிர் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு.என அவர் மேலும் தெரிவித்தார்.








வன்னியில் போராட்ட சிந்தனையுடன் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு சோரம் போகவில்லை-முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன். Reviewed by Author on July 17, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.