அண்மைய செய்திகள்

recent
-

கடந்த 5 வருடங்களில் நாட்டில் எந்தவொரு வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை - பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ


நாவலப்பிட்டியில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது “பொதுத் தேர்தல் எவ்வித சவாலுமில்லை என்பதால், இத்தேர்தல் மிகவும் சோம்பேறித்தனமாக உள்ளது” என  தெரிவித்துள்ளார்.அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்.....

 “கடந்த  5 வருடங்களில் நாட்டில் எந்தவொரு வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை. இதற்கான காரணம் ஜனாதிபதியும், பிரதமரும் இருவேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள். ஜனாதிபதி கூறுவதை பிரதமரும், பிரதமர் கூறுவதை ஜனாதிபதியும் செய்வதில்லை.

இந்தத் தேர்தலானது ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களே போட்டியிடும் தேர்தலாகவே எனக்கு விளங்குகின்றது. எதிர்க்கட்சி ஒன்று இல்லாவிட்டால் அது மிகவும் சோம்பலை ஏற்படுத்தும்.

எனது 50 வருட அரசியல் அனுபவத்தில் அனைத்து தேர்தல்களிலும் பாரிய போட்டி காணப்பட்டது. சவாலகவும் இருந்தது. எனினும்
இம்முறை எவ்வித போட்டியும் எமக்கில்லை“ எனக் குறிப்பிட்டுள்ளார்.


கடந்த 5 வருடங்களில் நாட்டில் எந்தவொரு வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை - பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ Reviewed by Author on July 31, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.