அண்மைய செய்திகள்

recent
-

கைவிடப்பட்ட துறைமுக ஊழியர் போராட்டம்.....

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுடன் இன்று (03) காலை இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக, கொழும்பு துறைமுகத்தின் வர்த்தக கைத்தொழில்கள் மற்றும் சேவைகள் முற்போக்கு தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

சீனாவிலிருந்து கொண்டு வரப்பட்ட கென்றி பாரம் தூக்கியை  (gantry crane)  தற்போதுள்ள இடத்திலிருந்து அகற்றி கிழக்கு முனையத்தில் நிறுவுவதற்கான அனுமதியை பெற்றுத் தருவதோடு, அது தொடர்பான யோசனையொன்றை அமைச்சரவையில் முன்வைப்பதாக  பிரதமர் உறுதியளித்துள்ளதாக,  கொழும்பு துறைமுகத்தின் வர்த்தக கைத்தொழில்கள் மற்றும் சேவைகள் முற்போக்கு தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஷியாமல் சுமணரத்ன தெரிவித்தார். ...  இதற்கமைய, குறித்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்தார்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தில் நிறுவுவதற்காக சீனாவிலிருந்து கொண்டு வரப்பட்டகென்றி பாரம் தூக்கியை (gantry crane)  விரைவாக குறித்த இடத்தில் நிறுவுமாறு வலியுறுத்தியே அவர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்...




கைவிடப்பட்ட துறைமுக ஊழியர் போராட்டம்..... Reviewed by Author on July 03, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.