அண்மைய செய்திகள்

recent
-

பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த புதிய அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்-மன்னார் நகர முதல்வர் ஞா-அன்ரனி டேவிட்சன்.

நாட்டிலே பொதுத் தேர்தல் ஒன்று இடம் பெற்று ஒரே கட்சியை சேர்ந்த புதிய அரசாங்கம் அமையப் பெற்றுள்ளது. அந்த வகையிலே மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்து பாதீக்கப்பட்ட மக்களின்   வாழ்வாதாரத்தை உயர்த்த புதிய அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்தார்.


-மன்னார் நகர சிபையின் 30 ஆவது அமர்வு இன்றைய தினம் புதன் கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் நகர சபையின் சபா மண்டபத்தில் இடம் பெற்றது.


அதன் போது தலைமை உரை நிகழ்த்துகையிலேயே நகர சபையின் தலைவர் அவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் உரையாற்றுகையில்,,,


நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பாக உரிய முறையில் விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டு,அவர்களுக்கு ஒரு தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும்.


புதிதாக அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடிகள் அகற்றப்பட்டு  நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பிரதான சோதனைச்சாவடிகளில் மாத்திரம் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடிகள் தளர்த்திக்கொள்ளப்பட வேண்டும்.


மேலும் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் சுதந்திரமான முறையிலே மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


மேலும் கடந்த அரசாங்கம் வீட்டுத்திட்டங்களை வழங்கியது.அந்த வீட்டுத்திட்டத்திற்கு முதற்கட்ட கொடுப்பணவுகள் மாத்திரம் வழங்கப்பட்டுள்ளது.


ஆனால் மிகுதி எந்த கொடுப்பணவுகளும் வழங்கப்படவில்லை. இதனால் பயணாளிகள் வீட்டுத்திட்டத்திற்கு கடனை பெற்று வீட்டுத்திட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.இன்று ஒவ்வொரு பயணாளிகளும் கடன் காரர்களாகியுள்ளனர்.


-எனவே வீட்டுத்திட்டத்திற்கான மிகுதி கொடுப்பணவுகளை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த புதிய அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.


-மேலும் மன்னார் பஸார் பகுதியில் மன்னார் நகர சபை பிரிவில் உள்ள வர்த்தக நிலையங்கள் சில ஒப்பந்தத்தை மீறி சட்ட விரோதாமான முறையில் கட்டுமானப்பணிகளை மேற்கொண்டுள்ளனர்.


-எனினும் குறித்த கட்டுமான பணிகளை உடனயாக அகற்றுமாறு மன்னார் நகர சபை மன்னார் பஸார் பகுதியில் உள்ள குறித்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு பல தடவை அறிவித்தல் வழங்கி இருந்தனர்.


-எனினும் மன்னார் நகர சபையின் அறிவித்தல்களுக்கு அமைவாக ஒப்பந்தத்தை மீறி சட்ட விரோதமாக மேற்கொள்ளப்பட்ட கட்டுமானப்பணிகளை அகற்றவில்லை.


இந்த நிலையில் இன்றைய தினம்(19) புதன் கிழமை இடம் பெற்ற அமர்வில் சபை உறுப்பினர்களை இணைந்து தீர்மானம் ஒன்றை மேற்கொண்டனர்.


-ஒப்பந்தத்தை மீறி மேற்கொள்ளப்பட்ட கட்டுமானங்களை கொண்ட வர்த்தக நிலையங்களை மூடி சட்ட விரோத கட்டுமான பணிகளை அகற்றியதன் பின்னர் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி வழங்குவது என தீர்மானம் மேற்கொண்டனர். ஏழு நாட்களுக்குள் சட்ட விரோத கட்டுமானங்கள் அகற்றப்படாது விட்டால் குறித்த நடவடிக்கையினை நகர சபை முன்னெடுக்கும் என தீர்மானிக்கப்பட்டது.


(மன்னார் நிருபர்)


(19-08-2020)






பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த புதிய அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்-மன்னார் நகர முதல்வர் ஞா-அன்ரனி டேவிட்சன். Reviewed by Author on August 20, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.