அண்மைய செய்திகள்

recent
-

இன ரீதியில் எவருக்கும் நாம் அமைச்சுக்களை வழங்கவில்லை... - பிரதமர் மஹிந்த ராஜபக்ச

எமது ஆட்சியில் சிறுபான்மை இனம், பெரும்பான்மை இனம் என்ற வேறுபாடுகள் இல்லை. அனைத்து இன மக்களும் இலங்கை மாதாவின் பிள்ளைகள். இன ரீதியில் எவருக்கும் நாம் அமைச்சுக்களை வழங்கவில்லை. தகுதி நிலையில் உள்ளவர்களுக்கே அமைச்சுப் பதவிகளை ஜனாதிபதி வழங்கியுள்ளார். அமைச்சுக்களின் எண்ணிக்கை வரையறைக்கேற்ப மேலும் தகுதியானவர்களை இணைத்துக்கொள்வோம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.


புதிய அமைச்சரவையில் சிறுபான்மையினருக்கு உரிய இடம் வழங்கப்படவில்லை என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

 அவர் மேலும் தெரிவிக்கையில்....

“புதிய அமைச்சரவையில் தமிழர் ஒருவரும், முஸ்லிம் ஒருவரும் என இரண்டு
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும், இராஜாங்க அமைச்சுகளிலும் தமிழர்கள் இருவர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர்.

 முஸ்லிம்களில் எவருமே நியமிக்கப்படவில்லை எனவும் எதிரணியினர்
இனவாதத்தைத் தூண்டும் வகையில் தமிழ், ஆங்கில, சிங்கள ஊடகங்களில்
கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

சிறுபான்மை இனத்தவர்களில் நால்வருக்கு மட்டுமே புதிய அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது என்பதே எதிரணியினரின் இனவாதப் பரப்புரையின் தலைப்பாக உள்ளது.  

சிறுபான்மை இன மக்களை இந்த அரசு புறக்கணித்துள்ளது என்ற
விசமத்தனமான சிந்தனையை தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் எதிரணியினர் விதைக்க முற்படுகின்றனர் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். 


இன ரீதியில் எவருக்கும் நாம் அமைச்சுக்களை வழங்கவில்லை... - பிரதமர் மஹிந்த ராஜபக்ச Reviewed by Author on August 18, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.