அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் மீட்கப்பட்ட சடல மர்மம் துலங்கியது: யாழ் யுவதியே கொலை; கொலைச்சூத்திரதாரி உடன்பிறந்த சகோதரி!

 மன்னாரில் அண்மையில் சடலமாக மீட்கப்பட்ட யுவதியின் கொலை மர்மம் துலங்கியுள்ளது. அந்த யுவதியின் சகோதரியே கொலையின் சூத்திரதாரியென்பதை புலனாய்வு பிரிவினர் கண்டறிந்தனர்.

இதையடுத்து யுவதியின் கொலையுடன் தொடர்புடைய இரண்டு பெண்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கொலையான யுவதி யாழ்ப்பாணம் நெடுந்தீவை சேர்ந்தவர்.


கடந்த 13ஆம் திகதி மன்னார்-சௌத்பார் புகையிரத நிலைய பிரதான பாதை அருகில் காணப்படும் உப்பளத்திற்கு சொந்தமான உப்பு உற்பத்தி பாத்தியில் இருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.

அது தொடர்பான தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், சடலத்தை மீட்டு, மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். சம்பவ இடத்திற்கு சென்ற நீதிவான் விசாரணைகளை மேற்கொண்டார்.

யுவதியின் சடலம் மன்னார் பொது வைத்தியசாலையில் அடைாளம் காணப்படாத நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

யுவதி பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாமென்ற சந்தேகம் ஏற்பட்டிருந்தது.

இந்த கொலை தொடர்பான மர்மம் நீடித்து வந்த நிலையில், கொழும்பிலிருந்து மன்னாரிற்கு வந்த விசேட புலனாய்வு அணியொன்று விசாரணைகளை முன்னெடுத்திருந்தது. இந்த விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளிப்பட்டுள்ளன.

சடலமாக மீட்கப்பட்ட யுவதி, யாழ்ப்பாணம் நெடுந்தீவை சேர்ந்த சுமார் 21 வயதுடையவர் என தெரிய வருகிறது.

யுவதியின் சகோதரியும், இன்னொரு பெண்ணும் கொலை சூத்திரதாரிகள் என பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலையை செய்தார்கள் என்ற சந்தேகத்தில் மன்னாரை சேர்ந்த சிலர் தேடப்பட்டு வருகிறார்கள். அவர்கள் தற்போது தலைமறைவாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ தினத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து கொலையான யுவதியை, கைதான இரண்டு பெண்களும் (சகோதரியும் மற்றையவரும்) முச்சக்கர வண்டியில் மன்னாரிற்கு அழைத்து வந்தது விசாரணையில் வெளிப்பட்டுள்ளது.

Join our Viber Group

https://invite.viber.com/?g2=AQBXPtWyRGupmUtg9UMzZidV5%2FpJQrQyY7hhJ%2BsAHfWAUsDd0sMGWrs9Q7TDf2ws&fbclid=IwAR26HIcCxzqajfWSb4Jj5zi5w5FmdWK8qtcSwR1Up07dwskbOYmI2ta4uuc

மன்னாரில் மீட்கப்பட்ட சடல மர்மம் துலங்கியது: யாழ் யுவதியே கொலை; கொலைச்சூத்திரதாரி உடன்பிறந்த சகோதரி! Reviewed by Admin on August 22, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.