அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் தேசிய கூட்டமைபின் தலைவர் உட்பட முக்கிய பதவிகளை தண்ணிச்சையாக வழங்க யாருக்கும் அதிகாரம் இல்லை- சால்ஸ்நிர்மலநாதன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் யார் ஊடகபேச்சாளர் யார் என்பதை தீர்மானிப்பது பாரளுமன்ற குழு  10 பாராளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்துதான் அதை தீர்மானிக்க வேண்டும் 


ஆனால் அப்படி ஒரு கூட்டம் இதுவரை இடம் பெறாத சூழ்நிலையில் பத்திரிக்கையில் தெரிவு இடம் பெற்று விட்டதாக செய்திகள் பிரசுரமாகியுள்ளமை ஆச்சரியமாக உள்ளது நிச்சயமாக வருகின்ற வியாழன் வெள்ளி கிழமைகளில் பாரளுமன்ற அமர்வுகள் இருக்கின்றன அந்த நேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து தான் அந்த தீர்மானத்தை மேற்கொள்வார்கள் ஒழிய அதை தன்னிச்சியாக வழங்க யாராக இருந்தாலும் அவர்களுக்கு அதிகாரம் இல்லை 

என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார் 

இலங்கை தமிழரசு கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில்  இடம் பெற்ற தமிழரசு கட்சியில் உயர்மட்ட குழுவினர் மற்றும் அங்கத்தவர்களுக்கான ஒன்று கூடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் 

அவர் மேலும் தெரிவிக்கையில்

2020 ஆண்டு பாரளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு பின்னடைவை சந்தித்திருக்கின்றது 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் வடக்கு கிழக்கு சார்பாக தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் விழுந்த வாக்குகளின் வீதங்களின் அடிப்படையில் இதை ஒரு பின்னடைவாக கருதுகின்றோம் 

அதன் அடிப்படையில் இன்று மன்னார் மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் எதிர்காலத்தில் எவ்வாறான நடைமுறைகளை கையால வேண்டும் தேர்தல் முடிவுகளில் தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைக்கு மிக குறைவாக வாக்களிக்க காரணம் என்ன அதை எதிர்காலத்தில் எப்படி சரிசெய்ய வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டு 10 பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார் 

மேலும்

மன்னார் மாவட்டத்தில் தமிழர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்காமல் ஏன் வேறு கட்சிகளுக்கு வாக்களித்தனர் அவ்வாறு வாக்களித்ததன் பிரதான நோக்கம் என்ன இதில் கட்சி சார்ந்த தவறுகள் எதும் இருக்கின்றதா அல்லது என் சார்ந்த  கட்சி ஆதரவாளர்கள் சர்ந்த தவறுகள் இருக்கின்றாதா என்று ஆராய குழு நியமிக்கப்பட்டுள்ளது 

அதே நேரத்தில் கட்சிக்குள் மன்னார் மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகளை பிரதேச ரீதியாக உள்வாங்குவது தொடர்பான தீர்மானமும் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் மன்னார் மாவட்டதில் வாக்களர்களாக தங்களை பதிவு செய்த வாக்காளர்கள் தங்களுடைய அனைத்து செயற்பாடுகளையும் புத்தளத்திலேயே மேற்கொள்கின்றார்கள் ஒரு சில அரசியல் வாதிகள் தங்களுடைய இலாபத்திற்காக அவர்களை பயன்படுத்துகின்றனர் அதை நீக்க வேண்டும் என்ற தீர்மானமும் இன்றையதினம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்

 இது தொடர்பாக இம் மாதம் இடம் பெறவுள்ள தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இந்த தீர்மானங்கள் கட்சியின் தலைமையிடம் சமர்பிக்கப்படும் என்பதுடன் தற்போதைய பின்னடைவை பாடமாக கொண்டு பிரிந்திருக்கும் வேறு கட்சிகளை சேர்ந்த தமிழ் வேட்பாளர்களையும் இணைத்து பயனிக்க கட்சி ஏக மனதாக தீர்மானம் எடுத்தது நானும் அதற்கு தயாரக உள்ளேன் என குறிப்பிட்டார்




தமிழ் தேசிய கூட்டமைபின் தலைவர் உட்பட முக்கிய பதவிகளை தண்ணிச்சையாக வழங்க யாருக்கும் அதிகாரம் இல்லை- சால்ஸ்நிர்மலநாதன் Reviewed by Admin on August 22, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.