அண்மைய செய்திகள்

recent
-

ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் 460 பேர் கைது

மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் போதைப்பொருளுடன் 460 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  இன்று (23) காலை 06 மணிக்கு நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன்போது, ஹெரோயின் போதைப்பொருளுடன் 106 பேரும், சட்டவிரோத போதைப்பொருளுடன் 102 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 21 பேரும் மற்றும் வேறு போதைப்பொருட்களுடன் 43 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

  சபுகஸ்கந்த, மிரிஹான, பேலியகொடை, நீர்க்கொழும்பு, தலங்கம, பமுனுவ மற்றும் தொம்பே ஆகிய பிரதேசங்களில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் 460 பேர் கைது Reviewed by Author on September 23, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.