அண்மைய செய்திகள்

recent
-

விவசாயிகளின் போராட்டங்களுக்கு மத்தியில் வேளாண் சட்டமூலங்கள் தாக்கல்

விவசாயிகளின் போராட்டங்களுக்கு மத்தியில் இரண்டு வேளாண் சட்டமூலங்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டன. 

 வேளாண் விளைபொருள் வர்த்தக சட்டமூலம், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் சட்டமூலம், அத்தியாவசியப் பொருட்கள் திருத்த சட்டமூலம் ஆகிய 3 சட்டமூலங்களும் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

 வேளாண் துறை தொடர்பாக ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டங்களுக்கு மாற்றாக இந்த சட்டமூலங்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த சட்டமூலங்களுக்கு ஆளும் பாரதீய ஜனதாவின் கூட்டணி கட்சியான சிரோமணி அகாலிதளம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அத்துடன், அக்கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் இராஜினாமா செய்தார். இந்த சட்டமூலங்களுக்கு பஞ்சாப், அரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். 

 இவ்வாறான நிலையில், விவசாயிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், மாநிலங்களவையில் இன்று 2 வேளாண் சட்டமூலங்கள் தாக்கல் செய்யப்பட்டன. விவசாய விளைபொருள் வர்த்தக சட்டமூலம் மற்றும் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் சட்டமூலம் ஆகியவற்றை வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்தார்.

 சட்டமூலங்களை தாக்கல் செய்து உரையாற்றிய அவர், ‘இந்த சட்டமூலங்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் எந்த தொடர்பும் இல்லை என்று உறுதியளிக்கிறேன். எம்எஸ்பி முறை தொடரும். வேளாண் சட்டமூலங்கள் தங்கள் பார்வையை ஒவ்வொருவரும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இரண்டு சட்டமூலங்களும் வரலாற்று சிறப்பு மிக்கவை, அவை விவசாயிகளின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும். 

விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நாட்டில் எங்கும் சுதந்திரமாக விற்பனை செய்ய முடியும்’ என்றார். வேளாண் மசோதாக்களுக்க எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 24ஆம் திகதி முதல் 26ஆம் திகதிவரை 3 நாட்கள் தொடர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாய சங்கம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

விவசாயிகளின் போராட்டங்களுக்கு மத்தியில் வேளாண் சட்டமூலங்கள் தாக்கல் Reviewed by Author on September 20, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.